INDvsWI: இரண்டாவது டி20-ல் என்ன என்ன மாற்றம்?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Feb 18, 2022, 10:58 AM IST
  • இந்தியா தொடரை 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
  • சர்மாவின் அதிரடி ஆட்டம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
  • ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது
INDvsWI: இரண்டாவது டி20-ல் என்ன என்ன மாற்றம்? title=

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 என்று வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது.  ஏற்கனவே ஒரு நாள் தொடரை 3-0 என்ற நிலையில் வென்றுள்ளது, நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.  

iyear

மேலும் படிக்க | INDvsWI:ரோஹித்தின் அதிரடியில் இந்தியா வெற்றி!

முதல் ஒருநாள் போட்டியில் 158 ரன்களை அடித்து வெற்றி பெற ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.  19 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார் ரோஹித், கடைசியில் சூரியகுமாரின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது.  விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மட்டும் இந்திய அணி ரசிகர்களுக்கு மிகவும் கவலையாக இருந்து வருகிறது, தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.  இன்றைய போட்டியில் இந்த ஆட்டத்திற்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

கடந்த முறை இரண்டு ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கிய இந்திய அணி இந்த முறையும் மாற்றம் இல்லாமல் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.  ஒருநாள் தொடரை இழந்த நிலையில் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி: இந்திய அணி ரோஹித் சர்மா (C), ரிஷப் பந்த், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், தீபக் ஹூடா, ஷஹ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட் 

டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி: நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (C), பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசைன், ரொமாரியோ ஆல் ஷெப்பர்ட், ஃபேபியன் கோஃபர்ட் ஜேசன் ஹோல்டர், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ்

மேலும் படிக்க | அவேஷ் கானிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News