INDvsWI:ரோஹித்தின் அதிரடியில் இந்தியா வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 16, 2022, 11:06 PM IST
  • நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்றது.
  • இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களம் இறங்கியது.
INDvsWI:ரோஹித்தின் அதிரடியில் இந்தியா வெற்றி! title=

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டி, மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி  வருகிறது. ரோஹித் சர்மா தலைமையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  இதனையடுத்து இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டி20 போட்டி தொடங்கியது.  பனிப்பொழிவு காரணமாக முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு  செய்தது. இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களம் இறங்கியது.  

 

மேலும் படிக்க | இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

முதல் விக்கெட்டை எளிதில் எடுத்த போதிலும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேயஸ் மற்றும் பூரான் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.  50 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்த மேற்கிந்திய தீவுகள் 90 ரன்களுக்கு 5 விக்கெட் என சரிந்தது.  இந்திய அணியின் ஸ்பின்நெர்கள் சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்தனர்.  கடைசியில் பொறுப்புடன் விளையாடி கேப்டன் பொல்லார்ட் அவுட் ஆகாமல் 24 ரன்கள் அடித்தார்.  இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.  20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.  

 

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது.  கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குடித்தார்.  19 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 40 ரன்கள் அடித்து வெளியேறினார்.  மறுபுறம் இஷான் கிஷன் நிதானமாக ஆடி 42 பந்தில் 35 ரன்கள் அடித்தார்.  கோலி மற்றும் பந்த் அடுத்தடுத்து வெளியேற கடைசியில் சூரியகுமார் யாதவ் 18 பந்தில் 34 ரன்கள் அடித்து அசத்தினார்.  இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 162 ரன்கள் அடித்து முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது.  இரண்டாவது போட்டி பிப்ரவரி 18ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

மேலும் படிக்க | INDvsWI: பிசிசிஐ ஸ்மார்ட் மூவ் - துணைக்கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News