புது டெல்லி: ஜூன் மாதம் 15ம் தேதி இரவு, லடாக்கில் (Ladakh) உள்ள கல்வான் பள்ளதாக்கில், சீன துருப்புகளுடன் நடந்த பயங்கரமான மோதலில், 20 இந்திய வீரர்கள் (Indian Army) வீர மரணம் அடைந்தனர்.
இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.
Read | அச்சப்படும் சீனா!! Galwan Valley-ல் கொல்லப்பட்ட வீரர்களின் தகவலை மறைக்கும் China
இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், சீன பொருட்களை (Boycott China) புறக்கணிப்பதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) அறை கூவல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சீன பொருட்களுக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்த அவர், தான் எந்த ஒரு சீன பொருட்களையும் வாங்க ஊக்குவிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இவர் தனது ட்விட்டர் கணக்கில், "சீன பொருட்களை தடை செய்யவும்" என எழுதியுள்ளார்.
Read | சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்த திட்டம்...
அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு (CAIT), ஹர்பஜனின் இந்த கருத்தை வரவேற்றுள்ளது. நிதி ஆதாயத்தை பொருட்படுத்தாமல், நாட்டு பற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ள முதல் இந்திய பிரபலம் என ஹர்பஜன் சிங்கை (Harbhajan Singh) பாராட்டியுள்ளது.
ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தனது, 103 டெஸ்ட் போட்டிகளிலும் 239 ஒரு நால் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், 2020 ஆம் ஆண்டின் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்கில் (Chennai Super Kings) இடம் பெற்றிருந்தார். எனினும், கொரோனா வைரஸ் காரணமாக, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (BCCI) ரத்து செய்துள்ளது.