14:59 12-01-2019
5-வது விக்கெட்டை இழந்தது இந்தியா, வெற்றிக்கு 64 பந்துகளில் 113 ரன்கள் எடுக்க வேண்டும்...
#39.2: WICKET! தினேஷ் கார்த்திக் 12(21) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
1st ODI. 39.2: WICKET! D Karthik (12) is out, b Jhye Richardson, 176/5 https://t.co/b0F0zsEAxg #AusvInd
— BCCI (@BCCI) January 12, 2019
தற்போது - 39.2 ஓவர்கள் | 5 விக்கெட் | 176 ரன்கள்
களத்தில் - ரோகித் 98(109) | ரவீந்திர ஜடேஜா 0(0)
14:44 12-01-2019
4-வது விக்கெட்டை இழந்தது இந்தியா, வெற்றிக்கு 78 பந்துகளில் 128 ரன்கள் தேவை...
1st ODI. 32.2: WICKET! MS Dhoni (51) is out, lbw Jason Behrendorff, 141/4 https://t.co/b0F0zsmZFI #AusvInd
— BCCI (@BCCI) January 12, 2019
#32.2: WICKET! மகேந்திர சிங் தோனி 51(96) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
தற்போது - 37 ஓவர்கள் | 4 விக்கெட் | 161 ரன்கள்
களத்தில் - ரோகித் 85(101) | தினேஷ் கார்த்திக் 10(15)
13:12 12-01-2019
150 பந்துகள் கடந்த நிலையிலும் இந்தியா 50 ரன்களை கூட எட்டாமல் தத்தளித்து வருகிறது...
1st ODI. 14.5: N Lyon to MS Dhoni (12), 6 runs, 44/3 https://t.co/b0F0zsmZFI #AusvInd
— BCCI (@BCCI) January 12, 2019
தற்போது - 15 ஓவர்கள் | 3 விக்கெட் | 44 ரன்கள்
களத்தில் - ரோகித் ஷர்மா 25(41) | டோனி 12(39)
12:22 12-01-2019
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா...
#0.6: WICKET! ஷிகர் தவான் 0(1) ரன் ஏதும் இன்றி வெளியேறினார்
#3.3: WICKET! விராட் கோலி 3(8) ரன்களில் வெளியேறினார்
#3.5: WICKET! அம்பத்தி ராயுடு 0(2) ரன்களில் வெளியேறினார்
1st ODI. 3.5: WICKET! A Rayudu (0) is out, lbw Jhye Richardson, 4/3 https://t.co/b0F0zsmZFI #AusvInd
— BCCI (@BCCI) January 12, 2019
தற்போது - 4 ஓவர்கள் | 3 விக்கெட் | 4 ரன்கள்
களத்தில் - ரோகித் ஷர்மா 0(12) | டோனி 0(1)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 288 ரன்கள் குவித்துள்ளது!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையிலும், டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையிலும் இன்று துவங்கி ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்க் தேர்வு செய்து விளையாடியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் 24(31), அரோன் பின்ச் 6(11) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய உஷ்மான் 59(81), மார்ஸ் 54(70), பீட்டர் ஹான்ஸ்கோம்ப் 73(61) என அரைசதங்களுடன் வெளியேறினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் குவித்து ஆஸ்., ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது!