ஆசிய விளையாட்டு 800m ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜித் சிங் தங்கம் வென்றுள்ளார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 10-வது நாளான இன்று 800m ஓட்டம் பிரிவில் இந்தியாவின் மன்ஜித் சிங் மற்றும் ஜான்சன் ஜின்சன் தேர்வாகினர்.
India's Manjit Singh wins gold medal, and Jinson Johnson wins silver medal in men's 800 metres finals. #AsianGames2018 pic.twitter.com/sp4be6ujcO
— ANI (@ANI) August 28, 2018
இப்போட்டியில் மன்ஜித் சிங் 1:46:15 கால அளவில் பந்தைய தூரத்தை கடந்து முதல் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜான்சன் ஜின்சன் 1:46:35 கால அளவில் பந்தைய தூரத்தை கடந்து இரண்டாம் இடத்தினை பிடித்தார்.
இப்போட்டியில் பெற்ற தங்கம் மூலம் 9 தங்கம் பெற்று இந்தியா பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப் படி இந்தியா 9 தங்கம், 17 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் என 47 பதக்கங்கள் பெற்றுள்ளது.
93 தங்கம் உள்பட 201 பதகங்களுடன் சீனா தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனாவை அடுத்து 43 தங்கம் உள்பட 141 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்தில் உள்ளது!