மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் ஆப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் டி-20 தொடரில் இருந்து விலகி உள்ளார் பும்ரா. அதேபோல வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது கணுக்கால் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று டி-20 போட்டிகளிலும் விளையாட மாட்டார். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு.
இன்று நடைபெறும் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என எதிர் பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாததால் உமேஷ் யாதவ் அல்லது தீபக் சாஹர் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 20 டி-20 போட்டிகளில் 15 வெற்றிகளைப் பெற்று தன்னமிக்கையுடன் இருக்கிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் பலத்துடன் இருக்கிறது. எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.