10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்ச்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை அந்த அணி எடுத்தது. மும்பை அணி சார்பின் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்தீவ் படேல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இறுதி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் மெக்கல்லம்-ஆல் ஒரு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.