ஐபிஎல் 2017: கொல்கத்தா - புனே இன்று பலப்பரீட்சை

Last Updated : May 3, 2017, 12:42 PM IST
ஐபிஎல் 2017: கொல்கத்தா - புனே இன்று பலப்பரீட்சை title=

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 

புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், குஜராத் அணிக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

மும்பை அணி 8 வெற்றிகளை குவித்து 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுது பெற்றுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ் ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல்திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

Trending News