IPL 2019: பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி

பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!!

Last Updated : Apr 28, 2019, 08:12 PM IST
IPL 2019: பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி  title=

பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!!
 
ஐபிஎல் தொடரில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் இல்லை. அவருக்குப் பதில் சந்தீப் லமிசானே சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் மோயின் அலி, டிம் சவுதி ஆகியோர் விளையாடவில்லை.

இந்த இரு அணிகளும் கடந்த 1ஆம் தேதி பெங்களூருவில் மோதினர். அந்தப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் பெங்களூர் அணி இதற்கு பலி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 தோல்விகள் அடைந்தப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. 

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52 (37) ரன்கள், ஷிகர் தவான் 50 (37) ரன்கள் எடுத்தனர். மேலும் ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 28 (13) ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் , உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52 (37) ரன்கள், ஷிகர் தவான் 50 (37) ரன்கள் எடுத்தனர். மேலும் ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 28 (13) ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் , உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து,  188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பார்த்தீவ் பட்டேல் 39 (20), ரன்கள், ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 32 (24) ரன்கள், குர்கீரத் சிங் மன் 27 (19) ரன்கள், சிவம் துபே 24 (16) ரன்கள். விராட்கோலி 23 (17) ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அமித் மிஸ்ரா மற்றும் ரபடா 2 விக்கெட், ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேல், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

Trending News