IPL 2020 News: இந்தியா வேகப்பந்து வீச்சாளர் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் பல உறுப்பினர்களுக்கு துபாயில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் -19 சோதனையில் பலருக்கு கொரோனா (COVID-19) தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.எஸ்.கே வீரர்கள், அணியின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.எஸ்.கே (CSK) அணி வெள்ளிக்கிழமை முதல் பயிற்சியைத் தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் நேர்மறை சோதனை செய்தவர்களின் பெயர்களை குழு நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.
ALSO READ | IPL 2020: விராட், தோனி மற்றும் ரோஹித்....யாருக்கு அதிகமான சம்பளம்?
தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, மீண்டும் மேற்கொள்ளப்படும் சோதனையில் நெகட்டிவ் (Corona Negative) என வந்த பின்னரே வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த வாரம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) விளையாடவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) க்காக சிஎஸ்கே அணி குழு துபாய் (Dubai) சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.