IPL 2020: ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய CSK; 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2020, 01:15 AM IST
IPL 2020: ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய CSK; 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

IPL 2020 Match 29 Updates: இன்றைய IPL போட்டியின் 29 வது போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 5 போட்டியில் தோல்வியும் மற்றும் 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இந்தியன் லீக் (IPL 2020) தொடரின் 29 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற CSK அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 

இன்றைய போட்டியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சனுக்கு பதிலா சாம் குர்ரன் களம் இறங்கினார். ஆனால் ஃபாஃப் டு பிளெசிஸ் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் அவுட் ஆனார். பின்னர் வந்த ஷேன் வாட்சன் மற்றும் சாம் குர்ரன் ஆட்டத்தை தொடர்ந்தார்கள். சாம் குர்ரன் அதிரடியா ஆடி வந்த நிலையில், சாம் குர்ரன் 31(21) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த அனைவரும் தங்கள் பங்களிப்பை செய்ய 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

ALSO READ |  IPL 2020: அனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு கொடுத்த Flying Kiss, வைரலாகிய படங்கள்..!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் சார்பில் டி நடராஜன், சந்தீப் சர்மா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

ஹைதராபாத் அணி வெற்றி பெற 168 ரன்கள் தேவை என்ற நிலையில், நிதானமாக ஆடினார்கள். கேன் வில்லியம்சன் அதிரடியாக 57(39) ரன்கள் எடுத்தார். ஆனால் சென்னை அணியின் பவுலிங் மற்றும் தோனியின் வியூகமும் மற்ற ஹைதராபாத் வீரர்கள் நிலைத்து நிற்க முடியாமல், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து அவுட் ஆனதால், 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News