IPL2022: புதிய அணியை வாங்க அதானி குழுமம் - இன்று ஏலம்!

அடுத்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2021, 09:59 AM IST
  • ஏலத்திற்கான 10 லட்சம் மதிப்புள்ள டெண்டரை இதுவரை 22 நிறுவனங்கள் எடுத்துள்ளன
  • பிசிசியின் விதிமுறைகள் படி 3 நிறுவனங்கள் இணைந்து அல்லது தனிநபர்கள் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்கலாம்.
IPL2022: புதிய அணியை வாங்க அதானி குழுமம் - இன்று ஏலம்! title=

இன்று புதிய இரண்டு ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நடத்துகிறது. இந்நிலையில், இந்த இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் 7,000 கோடி முதல் 10,000 கோடி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் மிக முக்கியமான விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது ஐபிஎல்.  இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் புதிய 2 அணிகள் சேர்ப்பதற்கான ஏலம் இன்று நடைபெறுகிறது.

இந்த ஏலத்திற்கான 10 லட்சம் மதிப்புள்ள டெண்டரை இதுவரை 22 நிறுவனங்கள் எடுத்துள்ளன. எனினும், இந்த புதிய 2 அணிகளுக்கான அடிப்படை விலை 2,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் 5 முதல் 6 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிசிசியின் விதிமுறைகள் படி 3 நிறுவனங்கள் இணைந்து அல்லது தனிநபர்கள் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்கலாம். அதேசமயம், தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தை பொருத்தவரையில் அவர்களின் வருடாந்திர வருவாய் குறைந்தபட்சம் 3,000 கோடியாக இருக்க வேண்டும்.  மூன்று நிறுவனங்கள் இணைந்து ஏலம் எடுக்கும் பட்சத்தில் அவற்றில் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2,500 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ALSO READ ரோஹித்தை அணியில் இருந்து நீக்க வேண்டுமா? கோலியின் பதில்!

இதனிடையே இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளார்.  அகமதாபாத் உரிமத்தை அதானி கைப்பற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அம்பானி மும்பை அணியின் உரிமத்தை வைத்துள்ளார்.  இதேபோல ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவும் முக்கியமான போட்டியாளராக கருதப்படுகிறார். ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் இந்த ஏலத்தில், தனியாக கலந்து கொள்ளுமா அல்லது வேறு ஏதும் நிறுவனங்களோடு இணைந்து இந்த ஏலத்தில் பங்கு பெறுமா என்பது இன்னும் தெரியவில்லை.  ஏனெனில், முன்னதாக ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (Rising Pune Supergiants (RPS)) அணியின் உரிமத்தை இரண்டு வருடங்களுக்கு சஞ்சீவ் கோயங்கா வைத்திருந்தார் என்பதும் ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியில் ATK மோஹுன் பாகன் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

bidding

சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 36 ஆயிரம் கோடி) ஒளிபரப்பு உரிமை கொண்ட இந்த ஐபிஎல் ஏலத்தில் கௌதம் அதானி மற்றும் சஞ்சீவ் கோயங்கா உள்ளிட்ட தொழில்துறை ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர் அவருக்குச் சொந்தமான அவ்ராம் கிளேசருக்குச் சொந்தமான லான்சர் குழுமமும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி ஏலம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களைத் தவிர்த்து கோடக் குழுமம், அரபிந்தோ பார்மா, டோரண்ட் குழுமம் ஆகியவையும் இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கின்றன.  அதேபோல கிரிக்கெட் ஸ்டேடியங்களைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட அகமதாபாத் மோடேரா நரேந்திர மோடி ஸ்டேடியம் மற்றும் 70 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்டேடியம் ஆகியவை இரண்டும் முக்கியமானதாக கருதப்படுகிறது.   அதேபோல இந்தூர் கவுகாத்தி கட்டாக் தர்மசாலா மற்றும் புனே ஆகிய நகரங்களில் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய நகரங்களை கருதப்படுகின்றன.  இதனிடையே இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஒருவர் இந்த ஐபிஎல் ஏலத்தில் 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  அவர் ஏதேனும் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் இன்று நடைபெறப்போகும் இரண்டு புதிய அணிகளுக்கான ஐபிஎல் ஏலம் அதிக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ALSO READ தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News