ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்; வென்றது சென்னை

இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 11:06 PM IST
  • ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்
  • சென்னை அணி அபார வெற்றி
  • ஹைதராபாத்தை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்; வென்றது சென்னை title=

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிய்ம் மோதினா. புனேவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வேயும் தொடக்கம் தந்தனர். இன்னிங்ஸை இந்த ஜோடி நிதானமாக தொடங்கியது.

Chennai

நிதானமாக தொடங்கினாலும் போகப்போக சென்னையின் ஆட்டத்தில் அனல் பறந்தது. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டம் ஆடி சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி தனது அரை சதத்தையும் பதிவு செய்தார்.

ருதுராஜ் - கான்வே ஜோடி விக்கெட் இழப்பின்றி 11ஆவது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. ருதுராஜுக்கு அடுத்து கான்வேயும் தனது அரைசதத்தை அடித்தார்.

இரண்டு பேரும் தொடர்ந்து தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹைதராபாத்தின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

Ruthuraj

சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை நோக்கி முன்னேறினார். அவர் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் 18ஆவது ஓவரில் 99 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

கெய்க்வாட் அவுட்டாகும்போது சென்னை அணி 18 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ருதுராஜ் - கான்வே ஜோடி விக்கெட் இழப்பின்றி சென்னை அணிக்காக அதிக ரன்களை எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையையும் ருதுராஜ் பெற்றார்.

மேலும் படிக்க | மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை?

ருதுராஜ் வெளியேறிய பிறகு தோனி களம் புகுந்தார். கேப்டனாக களமிறங்கியிருக்கும் தோனி அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் சுமாராக ஆடிய அவர் நடராஜன் ஓவரில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின் நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சென்னை இதுவரை 22 முறை 200 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்தது.

Hyderabad

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கேன் வில்லியம்சனும், அபிஷேக்கும் களமிறங்கினர். பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்ற கட்டாயத்தால் ஆரம்பத்திலேயே அதிரடியை கையில் எடுத்தது இந்த ஜோடி.

மேலும் படிக்க | மீண்டும் வென்றது லக்னோ... பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி

இதன் காரணமாக ஐந்து ஓவர்களிலேயே அந்த அணி 50 ரன்களை எடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 6ஆவது ஓவரில் அபிஷேக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக களிமிறங்கிய மார்க்ரமுடன் வில்லியம்சன் இணைந்தார்.

Chennai

மார்க்ரம் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்புடன் விளையாடிய வில்லியம்சன் பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 

சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி சென்னையின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக வில்லியம்சன் எல்பிடபிள்யு முறையில் 47 ரன்களில் வெளியேறியதால் ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஷாஷாங்கும் வெளியேற அடுத்ததாக வந்த வாஷிங்டன் சுந்தரும் வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

அவருக்கு பிறகு வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் முகேஷ் சௌத்ரி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News