சென்னை அணிக்கு புதிய ரூபத்தில் திரும்பிய ஷர்துல் தாக்கூர்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 2, 2022, 08:13 AM IST
  • மீண்டும் சென்னை கேப்டனான தோனி.
  • மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை.
  • இருப்பினும் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு புதிய ரூபத்தில் திரும்பிய ஷர்துல் தாக்கூர்! title=

ஐபிஎல் 2022 போட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.  இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் பங்கேற்றது.  இதனால் ஐபிஎல் மெகா ஏலமும் இந்த ஆண்டு நடைபெற்றது.  இதில் ஒவ்வொரு அணியிலும் இருந்த பல முக்கிய வீரர்கள் வேறு சில அணிகளுக்கு இடம் மாறினர்.  இதில் பெரிதாக பாதிக்கப்பட்டது சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள்.  தங்களது முக்கிய வீரர்களை ஏலத்தில் மீண்டும் எடுக்க முடியாமல் தவறவிட்டது.  இதன் காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் இரு அணிகளும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க | மீண்டும் வென்றது லக்னோ... பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி

புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை சென்னை மற்றும் மும்பை அணிகள் பிடித்து உள்ளன.  5 முறை சாம்பியன் ஆனா மும்பை அணிக்கு, 4 முறை சாம்பியன் ஆனா சென்னை அணிக்கும் இந்த நிலைமையா என்று ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.  சென்னை அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.  இருப்பினும் இந்த ஆண்டு அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததால் தோல்விகளை சந்தித்து வருகிறது.  பாப் டு பிளசிஸ், சாம் கரண், தாகூர் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தவறவிட்டது.  

faf

கடந்த சில சீசன்களில் சென்னை அணிக்கு டெத் ஓவர்களில் சிறப்பான பவுலிங்கை ஷர்துல் தாக்கூர் வீசி வந்தார்.  இவரது ஸ்லோ பால்களில் பல விக்கெட்கள் விழுந்துள்ளன.  குறிப்பாக கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஷர்துல் தாக்கூர் தான் முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.  பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.  விக்கெட்களை எடுத்தாலும், ரன்களை வாரி வழங்குவதில் முதல் ஆளாகவும் இருந்தார்.  ஆனால், முக்கிய கட்டத்தில் சிறப்பாக பந்து வீசியதால் சென்னை அணியில் நீங்கா இடம் பிடித்து இருந்தார்.

mukesh

ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹருக்கு 14 கோடியை ஏலத்தில் விட்டு கொடுத்ததால் தாகூரை அணியில் எடுக்க முடியாமல் போனது.  2018-ல் இருந்து 2021 வரை சென்னை அணிக்காக 2.60 கோடிக்கு ஆடி வந்த தாகூரை டெல்லி அணி ஏலத்தில் 10.75 கோடிக்கு வாங்கியது.  அவரது இடத்தை நிரப்ப சென்னை மாற்று  தேடி வந்தது.  நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் நான் தான் தாகூருக்கு ரீப்பிளேஸ்மெண்ட் என்பதை நிரூபித்து உள்ளார் முகேஷ் சௌத்ரி.  சென்னை அணி முதல் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும், ஹைதராபாத் அணியும் பேட்டிங்கில் அதிரடி காட்டியது.  இந்த சமயத்தில் முகேஷ் சௌத்ரி அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.  இது போட்டியை சென்னை பக்கம் திருப்பியது.  

csk

முகேஷ் சௌத்ரியை சென்னை அணி ஏலத்தில் 20 லட்சத்திற்கு எடுத்தது.  மஹாராஷ்டிராவை சேர்ந்த இவர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வருகிறார்.  தாகூரை போலவே, முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அதே சமயத்தில் ரன்களையும் வாரி வழங்குகிறார்.  நேற்றைய போட்டியில் 4 ஓவர்களில் 4 விக்கெட்களை கைப்பற்றி 46 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.  இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் லார்ட் தாகூர் சென்னை அணிக்கு திரும்பி விட்டார் என்று இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் சென்னை அணிக்கு தோனி மீண்டும் கேப்டன் ஆனதை தொடர்ந்து அணி வெற்றி பெற்று இருந்தாலும் ரசிகர்கள் ஏகபோக மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க | மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News