ஐபிஎல் 2022ன் இன்றைய முக்கிய ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது. டெல்லி அணி இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு நுழைய முடியும். அதே சமயம் டெல்லி கேபிட்டல்ஸ் தோல்வி அடைந்தால் தான் ஆர்சிபி பிளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும். இதனால் இன்றைய லீக் ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு விளையாடுவேனா? தோனியின் அசரவைக்கும் பதில்!
ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி கடந்த ஆண்டு வெளியேறினார். இதனால் அடுத்த கேப்டன் யார் என்பதில் பலருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், ஏலத்தில் சென்னை அணியின் முக்கிய வீரரான ஃபாஃப் டு பிளெசிஸை ஆர்சிபி தங்கள் அணியில் எடுத்தது, மேலும் கேப்டன் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தது. இந்த சீசனில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையில் ஆர்சிபி குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றது. இருப்பினும் தொடர்ந்து சில போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் வாய்ப்பு தற்போது சிக்கலில் உள்ளது.
ஆர்சிபி தற்போது புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கி உள்ளது. டெல்லி அணி மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்தால் மட்டுமே ஆர்சிபி-ன் பிளே ஆப் கனவு நனவாகும். டெல்லி அணி வெற்றி பெரும் பட்சத்தில் பிளே ஆப்பிற்கு 4வது அணியாக தகுதி பெற்றுவிடும். ஏற்கனவே பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளது. தற்போது ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட்கோலி நேரடியாகவே மும்பை அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
.@RCBTweets captain @faf1307 & @imVkohli share the microphone duties at Wankhede for an https://t.co/sdVARQFuiM special. By - @28anand
P @mipaltan, you know who's backing you against #DC
Full interview #TATAIPL | #RCBvGT https://t.co/w3HllceNNL pic.twitter.com/HRqkTkOleF
— IndianPremierLeague (@IPL) May 20, 2022
மேலும் படிக்க | மும்பைக்கு ஐஸ் வைக்கும் டூபிளசிஸ் - இதற்கு தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR