Hardik Pandya MS Dhoni: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் குவாலிஃபயர் 1 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (மே 24) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் மோதுகிறது.
அனல் பறக்கும் பிளே ஆப்!
இதையடுத்து, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் நிலையில், தோல்வியடையும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு செல்லும். தொடர்ந்து, நாளைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறி, வெற்றிபெறும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறும்.
குவாலிஃபயர் 1 போட்டியில் தோற்றவர்களும், எலிமினேட்டரில் வெற்றிபெற்றவர்களும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் வரும் மே 26ஆம் தேதி மோதும். அதில் வெற்றிபெறும் அணி, அதே மைதானத்தில் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும். ரசிகர்களுக்கு இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
என்றும் தோனியின் ரசிகன்
அந்த வகையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்த அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தோனி குறித்து தெரிவித்திருந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது,"நான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இருப்பேன், அங்குள்ள பல ரசிகர்களுக்கும், பல கிரிக்கெட் பிரியர்களுக்கும் அதேதான். மகேந்திர சிங் தோனியை வெறுக்க நீங்கள் கொடிய மனமுடையவராக (Devil) இருக்க வேண்டும்.
நான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இருப்பேன், அங்குள்ள பல ரசிகர்களுக்கும், பல கிரிக்கெட் பிரியர்களுக்கும் நான். மகேந்திர சிங் தோனியை வெறுக்க நீங்கள் சரியான பிசாசாக இருக்க வேண்டும்.
அவர் சீரியஸானவர் இல்லை
தோனி ஒரு சீரியஸான மனிதர் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் அவரிடம் நகைச்சுவையாக பேசுவேன், நான் அவரை மகேந்திர சிங் தோனியாக பார்க்கவில்லை. வெளிப்படையாக, நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நிறைய நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், அதைப் பார்க்கும்போது அவரிடம் அதிகமாகப் பேசவில்லை என தோன்றுகிறது.
Captain. Leader. Legend.@msdhoni is an emotioHere’s a special tribute from @hardikpandya7 to the one and only Thala ahead of a special matchday in Chennai!#GTvCSK | #PhariAavaDe | #TATAIPL Playoffs 2023 pic.twitter.com/xkrJETARbJ
— Gujarat Titans (@gujarat_titans) May 23, 2023
என்னைப் பொறுத்தவரை, அவர் என் அன்பான நண்பர், அன்பான சகோதரர், நான் அவரிடம் குறும்புகள் செய்வேன், அவரிடம் நிதானமாக உணர்வேன்" என்றார். குஜராத் டைட்டன்ஸ் அணி, தோனியை 'கேப்டன்' என குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஜெயிக்கப்போவது யார்?
தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவென கூறப்படும் நிலையில், அவர் விளையாடுவதை நேரில் காண பல்லாயிரக்கணக்கானோரும், அதை திரையில் பார்க்க பல கோடி ரசிகர்களும் போட்டியின் போது காத்திருக்கின்றனர். அவர் களமிறங்கினால் மைதானமே அதிரும் வகையிலான சம்பவங்கள் இந்த தொடரில் நடந்துள்ளது. மேலும், தோனியின் சிஎஸ்கே அணி இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது இல்லை என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ