ஐபில்2022; முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ - சென்னை, மும்பை மோதும் ஆட்டங்கள்

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2022, 06:14 PM IST
ஐபில்2022; முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ - சென்னை, மும்பை மோதும் ஆட்டங்கள் title=

ஐபிஎல் 2022 கிரிக்கெட் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனேவைச் சுற்றியிருக்கும் மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. 

மேலும் படிக்க | INDvsSL: இந்திய அணி வெற்றி - முதல் டெஸ்ட் சுவாரஸ்யங்கள்

கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதுபோல் அல்லாமல் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால், இந்த முறை புதிய முறையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. குஜராத் மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் களம் காண இருப்பதால் டபுள் ஹெட்டர்ஸ் முறைப்படி அணிகள் மோத இருக்கின்றன. 

இதற்காக தலா 5 அணிகள் என்ற அடிப்படையில் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறையும், அடுத்த பிரிவில் இருக்கும் 4 அணிகளிடம் தலா ஒரு முறையும், எஞ்சிய ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத உள்ளன. 

இப்போது வெளியாகியிருக்கும் ஐபிஎல் அட்டவணைப்படி, மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 ஆம் நாளில், அதாவது மார்ச் 27 ஆம் தேதி மும்பை அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது. அன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. 

மேலும் படிக்க | வார்னேவால் இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர்? ராக்ஸ்டார்

மும்பை வான்கடேவில் 20 போட்டிகளும், பிராபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகளும், டி.ஓய். பாட்டில் மைதானத்தில் 20 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News