ஐபிஎல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிட்டு வர்ற ரவீந்திர ஜடேஜா, அந்த டீமோட அதிருப்தியில இருக்குறதாச் சொல்லப்படுது. சென்னை டீமோட ஜடேஜாவுக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இப்போ இல்லைனும் அதனால அடுத்த சீசன்ல அவர் சென்னை டீமை விட்டு வெளியே போகப் போறதாகவும் சொல்றாங்க. ஒருவேளை அவர் சென்னை டீம்ல இருந்து வெளியேறுனா வேற எந்தெந்த டீமுக்கெல்லாம் அவர் போக அதிக வாய்ப்பு இருக்குனு இப்போ பாக்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜடேஜாவைப் பொறுத்தவரை ஐபிஎல் முதல் சீசன்ல இருந்தே விளையாடிக்கிட்டு இருக்காரு. அந்த வகையில முதன்முதலா அவரை விலைக்கு வாங்குன அணி ராஜஸ்தான் ராயல்ஸ்தான். ஐபிஎல் முதல் கோப்பையை ஜெயிச்ச ராஜஸ்தானோட டீம் லெவன்லயும் ஜடேஜா இருந்தாரு. அதனால ஐபிஎல்ல தன்னை அறிமுகம் செஞ்சு வச்ச அணிக்கே ஜடேஜா மீண்டும் போறதுக்கு அதிக வாய்ப்பு இருக்குது.
மும்பை இந்தியன்ஸ்
அடுத்ததா எதிர்பார்க்கப்படுற டீம் எதுனு பார்த்தா அது மும்பை இந்தியன்ஸ்தான். ஐபிஎல்லை பொறுத்தவரை மத்த டீம்களுக்கு இடையே நடக்குற மேட்ச்லாம் வெறும் போட்டி மாதிரி நடந்தா மும்பைக்கும் சென்னைக்கும் நடுவுல நடக்குற மேட்ச் எப்போவும் போர் மாதிரிதான் இருக்கும். அதிக தடவை சாம்பியன் ஆகிருக்குற இந்த ரெண்டு டீமுக்கு நடுவுல நடக்குற போட்டி எப்போதும் சுவாரஸ்யமானதுதான்.
மும்பையைப் பொறுத்தவரை அந்த அணியில இருந்த ஹர்திக் பாண்ட்யாவும் குர்னால் பாண்ட்யாவும் வேறு அணிகளுக்கு மாறிட்டதால சரியான ஆல் ரவுண்டர் கிடைக்காம மும்பை அணி இருந்துட்டு வருது. அதனால அந்த இடைவெளியை நிரப்பும் விதமாக ஜடேஜா மும்பை பக்கம் இடம்பிடிக்கலாம்னும் எதிர்பார்க்கப்படுது.
குஜராத் டைட்டன்ஸ்
லிஸ்ட்டுல அடுத்ததா உள்ள அணி குஜராத் டைட்டன்ஸ். ரவீந்திர ஜடேஜாவோட சொந்த ஊரான குஜராத்தின் பெயர்ல இயங்குற அணி. ஐபிஎல்ல பெரும்பாலான பிளேயர்களுக்கு தங்களோட சொந்த ஊர் பெயர்ல இயங்குற அணிக்காக விளையாடனும்ங்கிற ஆசை ரொம்பவே உண்டு. ஜடேஜா தன்னோட கடந்த காலங்கள்ல ராஜஸ்தான், சென்னை, கேரளானு மாறி மாறி விளையாடிருக்காரு.
இதுக்கு நடுவுல, 2 வருசம் மட்டுமே இருந்த குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடி இருக்காரு. இந்த நிலையிலதான் கடந்த சீசன்ல இருந்து குஜராத் டைட்டன்ஸ்ங்கிற ஒரு புதிய அணி உருவாகி இருக்கு. ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துற குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தொடர்லயே சாம்பியனும் ஆகிருக்கு. சொந்த ஊர் பெயர்ல இயங்குற அணிக்காக விளையாடலாம்னு ஜடேஜா முடிவு செய்யும் பட்சத்துல குஜராத் அணிக்கு ஜடேஜா போக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுது.
இது மட்டுமில்லாம வேறு சில அணிகள் பத்தியும் பேச்சு அடிபட்டுக்கிட்டு இருக்குது. எது எப்படி இருந்தாலும் அவர் எந்த டீமுக்கு போகப் போறாருனு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியவந்திடும். வெயிட் பண்ணி பாக்கலாம்.
மேலும் படிக்க | தோனியுடன் மீண்டும் வெடித்த மோதல்? CSKவிலிருந்தே ஒட்டுமொத்தமாக விலகுகிறார் ஜடேஜா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR