ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தா-மும்பை அணிகள் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. 

Last Updated : Dec 10, 2016, 11:43 AM IST
ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தா-மும்பை அணிகள் இன்று மோதல் title=

புதுடெல்லி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. 

அரைஇறுதிசுற்று இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் அரைஇறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா- மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

2-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது. 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி சொந்த மண்ணில் சொதப்பியே வருகிறது. 

இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம்.  இவ்விரு அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதி சுற்று வருகிற 13-ம் தேதி மும்பையில் நடைபெறும். 

Trending News