ஜூனியர் ஹாக்கி: 2-வது முறையாக இந்திய அணி சாம்பியன்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Last Updated : Dec 19, 2016, 08:55 AM IST
ஜூனியர் ஹாக்கி: 2-வது முறையாக இந்திய அணி சாம்பியன் title=

புதுடெல்லி: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் ஆண்களுக்கான 11-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின.

8-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் கோல் அடிக்க இந்தியா முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்தில் பதில் கோல் அடிக்க பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இருந்தாலும் இந்திய வீரர்கள் அவர்களுக்கு எந்த வகையிலும் கோல் அடிக்க இடம் கொடுக்கவில்லை. ஆட்டம் முடியும் கடைசி நொடியில் பெல்ஜியத்திற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணியின் பேப்ரிஸ் கோலாக்கினார். இதனால் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-வது முறையாக ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன் ஜெர்மனி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதன்பின் 2-வது முறையாக கோப்பையை வாங்கிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி தங்கப்பதக்கத்தையும், பெல்ஜியம் வெள்ளியையும் உறுதி செய்தன.

Trending News