கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ஐபிஎல் போட்டியின் மீது இருக்கும் நிலையில், இளம் பந்துவீச்சாளர் ஒருவர் வெறும் 19 பந்துகளில் ஹாட்ரிக் எடுத்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
யார் அந்த பந்துவீச்சாளர்?
நேபாளத்தில் பப்புவா நியூ கினியா, மலேசியா மற்றும் நேபாளம் இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேபாளம் அணி, பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் நேபாள அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தான் நேபாள அணியின் பந்துவீச்சாளர் கே.சி.கரன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க | மொயின் அலியால் சிஎஸ்கே-வில் பறிபோன நியூசிலாந்து வீரரின் வாய்ப்பு
நேபாள அணி வெற்றி
இப்போட்டியில் நேபாள அணி 7 விக்கெட் இழப்புக்கு 2013 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் தீபேந்தர் சிங் ஏரி 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 2014 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமறிங்கிய பப்புவா கினியா அணி, 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. நேபாள பந்துவீச்சாளர் கேசி. கரண் ஹாட்ரிக் எடுத்ததுடன் 5 விக்கெட்டுகளை வெறும் 19 பந்துகளில் சாய்த்து அசத்தினார். இதன் மூலம் அவருக்கு வாழ்த்துகள் குவித்து வருகிறது.
மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR