சரித்திரம் படைத்து தங்கம் வென்ற மீராபாய் சானு! காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை

Mirabai Chanu clinches India's 1st gold at CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையுடன் பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார் மீராபாய் சானு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2022, 09:07 AM IST
  • காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய் சானு
  • பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவின் புதிய சாதனை
  • 49 கிலோ பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் சானு.
சரித்திரம் படைத்து தங்கம் வென்ற மீராபாய் சானு! காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை title=

Commonwealth Games 2022: நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சனிக்கிழமை (ஜூலை 30) பெண்கள் 49 கிலோ பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.  பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், தனது இறுதிப் போட்டியின் ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க் சுற்றுகள் ஆகிய இரண்டிலும் புதிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் முறையில் 88 கிலோ எடையைத் தூக்கி, அதைத் தொடர்ந்து 113 கிலோ எடையுடன் க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 201 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்த சானு மகுடம் சூடினார்.

2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சானு, 49 கிலோ பெண்கள் பளு தூக்குதல் போட்டியில் நடப்பு சாம்பியனாகவே களம் இறங்கினார்.  

மேலும் படிக்க | விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரண நிதி கிடைக்குமா?

49 கிலோ பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, ஸ்னாட்ச் சுற்றில் தனது முதல் முயற்சியில் 84 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் விளையாட்டு சாதனையை நிகழ்த்தினார். 27 வயதான மீராபாய் சானு, தனது இரண்டாவது ஸ்னாட்ச் முயற்சியில் 88 கிலோ வரை பளு தூக்கி புதியசாதனையை படைத்தார்.

மீராபாய் சானுவின் இந்த சாதனையை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை டிவிட்டரிலும் பகிரிந்து மகிழ்கின்றனர்.

88 கிலோ பளு தூக்கி புதிய சாதனையை படைத்த சானு, ஸ்னாட்சிலும் தனது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தினார். மூன்றாவது மற்றும் கடைசி முயற்சியில் 90 கிலோவுக்குச் சென்றார், ஆனால் அது முடியாததால் ஸ்னாட்ச்சில் அவரது சிறந்த லிஃப்ட் 88 கிலோ என்பதுடன் நின்று போனது.

ஸ்னாட்ச் சுற்றில் சாதனையைப் படைத்த பிறகு, சானு க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 113 கிலோ தூக்கி, தனது ஒட்டுமொத்த லிப்டை 201 கிலோவாக எடுத்து புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ள மீராபாய் சானு, 2014 போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார், மேலும் கடந்த இரண்டு பதிப்புகளிலும் தொடர்ந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் இப்போது 48 கிலோ மற்றும் 49 கிலோ பெண்கள் பிரிவுகளில் காமன்வெல்த் விளையாட்டு சாதனையை முறியடித்துள்ளார். இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக இருந்த சானு, இறுதிப் போட்டியில் அவர் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

"நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் காமன்வெல்த் விளையாட்டு சாதனையை 48 கிலோவில் முறியடித்தேன், இப்போது நான் அதை 49 கிலோவில் செய்துள்ளேன்," இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற பிறகு சானு கூறினார். முன்னதாக பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் சங்கேத் சர்கார் வெள்ளியும், ஆடவர் 61 கிலோ பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலமும் வென்றனர்.

மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய தங்க நாயகன் நீரஜ் சோப்ரா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News