ஹாமில்டன்: டி 20 தொடரில் 0-5 என்ற தோல்வியிலிருந்து மீண்ட நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹாமில்டனின் சதான் பூங்காவில் நடந்த இந்த போட்டியில், இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரின் (103) சதம், விராட் கோலி (51) மற்றும் லோகேஷ் ராகுல் (88) ஆகியோரின் அரைசதம் உதவியோடு இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. ஆனால் பதிலுக்கு, நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் (109 ஆட்டமிழக்காமல்) 21 வது சதத்தை அடித்தார். கேப்டன் டாம் லாதம் (69) மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் (78) ஆகியோரின் ஆதிரடி ஆட்டத்தால் இலக்கை எட்டினர். 6 விக்கெட்டுகளுக்கு 348 ரன்கள் எடுத்தனர். 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு டெய்லருக்கும் லாதத்திற்கும் இடையிலான நான்காவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.
சாதனை:
இந்த போட்டியில் சாதனையைப் பார்க்கும்போது, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மிக உயர்ந்த ரன் சேசிங் ஆகும். முன்னதாக 2019 ஆம் ஆண்டில் மொஹாலி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 359 ரன்கள் எடுத்த இலக்கை எட்டியது.
இந்திய இன்னிங்ஸ்:
நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் சதம், கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரின் அரைசதம் இன்னிங்ஸின் அடிப்படையில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா நான்கு விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. மீண்டும் தனது திறமையை முன்வைத்த ஐயர், 107 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். டி 20 தொடரில் "போட்டியின் வீரராக" இருந்த ராகுல், 64 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். கோஹ்லி 63 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஐயர் தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். ராகுலுடன் நான்காவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தார். கடைசி பத்து ஓவர்களில் இந்தியா 96 ரன்கள் எடுத்தது.
பிருத்வி மற்றும் மாயங்க் அவுட்:
முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச முடிவு செய்தது. நியூசிலாந்து அணியில் டாம் ப்ளண்டெல் அறிமுக நாயகனாக களம் இறங்கினார். இந்தியா தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஷா மற்றும் அகர்வால் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் 50 ரன்கள் 48 பந்துகளில் எடுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் ஐந்து பந்துகளுக்குள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்த நேரத்தில் இந்தியாவின் ஸ்கோர் இரண்டு விக்கெட்டுக்கு 54 ஆக இருந்தது.
கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 102 ரன்கள் சேர்த்தனர்:
இதன் பின்னர், கோஹ்லி மற்றும் ஐயர் நடுத்தர ஓவர்களில் எச்சரிக்கையுடன் விளையாடினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 28 வது ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. கோஹ்லியை இஷ் சோதி பெவிலியனுக்கு அனுப்பினார். இருந்தாலும், இந்தியாவின் ரன் ரேட் குறையவில்லை. ராகுல் தனது இன்னிங்ஸில் ஆறு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்தார்.
கடைசி 20 ஓவர்களில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது:
47 வது ஓவரில் இந்தியா 300 ரன்களை எடுத்தது. கடைசி 20 ஓவர்களில் 191 ரன்கள் இந்திய அணி எடுத்தது. கேதர் ஜாதவ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ராகுலுடன் சேர்ந்து 27 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து வெற்றி:
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்கம் மெதுவாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால் ராஸ் டெய்லர் (109), அணியின் கேப்டன் (69), டாம் லாதம் (69) மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் (78) ஆகியோரின் ஆதிரடி ஆட்டத்தால் 48.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.