SL vs NZ உலக கோப்பை 2019: 3 ஆண்டுகளாக நியூசிலாந்து தோற்கவில்லை; இலங்கை சமாளிக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெரும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் மற்றும் இலங்கை அணியும் மோதுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 1, 2019, 11:02 AM IST
SL vs NZ உலக கோப்பை 2019: 3 ஆண்டுகளாக நியூசிலாந்து தோற்கவில்லை; இலங்கை சமாளிக்குமா? title=

டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து அணியும் மற்றும் இலங்கை அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். இந்த கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று கார்டிஃப்பில் நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் ஐசிசி தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், 9-வது இடத்தில் இருக்கும் டிமுத் கருணாரட்ன தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளன.

இரு அணிகளுக்கும் இடையே பார்த்தால் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 98 போட்டிகளில் நியூசிலாந்து அணி 48 போட்டியிலும், இலங்கை 41 போட்டியிலும் வென்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. 8 ஆட்டங்களில் முடிவி இல்லை. 

இந்தியாவுக்கு எதிரானா பயிற்ச்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, அதே போல் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினார்கள் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியை பொருத்த வரை வலிமையான பேட்டிங் இல்லை என்றே கூறலாம். இலங்கை கடைசியாக ஆடிய 15 ஒரு நாள் போட்டிகளில் 13-ல் தோல்வியை தழுவியுள்ளது. பயிற்ச்சி ஆட்டத்தில் ஆடிய இரண்டு போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேட்ச்), டாம் லதாம் (விக்கெட்), மார்டின் குப்டில், கொலின் முர்ரோ, ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட், லாக்ஸி பெர்குசன், மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூண்டெல்.

இலங்கை: தியர பெரேரா, சுந்தர லக்மால், இசுரு உடனா, லசித் மலிங்கா, ஜெஃப்ரி வந்தர்ஷே, மிலிந்த ஸ்ரீவர்தன, நுவன் பிரதீப், ஏஞ்சலோ, திஸ்ஸர பெரேரா, எல்.கே. பெரேரா, அவஷ்கா பெர்னாண்டோ.

Trending News