4வது அணியாக பிளே ஆப் செல்ல போட்டி போடும் 4 அணிகள்!

ஐபிஎல் 2021ல் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 4 அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

Written by - RK Spark | Last Updated : Oct 7, 2021, 01:15 PM IST
  • அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது.
  • இன்று இரவு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்பு உள்ளது.
4வது அணியாக பிளே ஆப் செல்ல போட்டி போடும் 4 அணிகள்! title=

ஐபிஎல் 2021 போட்டிகள் பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கு நெருங்கி விட்டன.  அனைத்து அணிகளும் 13 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் டெல்லி, சென்னை, பெங்களூரு அணிகள் மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.  4வது இடத்திற்கு கிட்ட தட்ட 4 அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

இன்னும் அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது.  கொல்கத்தா மற்றும் மும்மை அணிகள் 12 புள்ளிகளுடன் 4,5 வது இடத்தில் உள்ளன.  பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் 10 புள்ளிகளுடன் 6,7 இடத்தில் உள்ளன.  இன்று மற்றும் நாளையுடன் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ளது.  இன்று மதியம் நடக்கும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிக ரன் ரேட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் 10 புள்ளிகளுடன் முன்னேறி செல்லும்.  கொல்கத்தா மற்றும் மும்மை அணிகள் தோற்றால் மட்டுமே பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு பலிக்கும்.

mi

அதேபோல் இன்று இரவு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்பு உள்ளது.  ஆனால் கொல்கத்தா அணி இன்று தோல்வி அடையும் பட்சத்தில் மும்மை அணி எளிதாக பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளது.  நாளை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்மை மிகப்பெரிய ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெரும் பட்சத்தில் மும்பை அணி பிளே ஆப் நுழைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

pun

மேலும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து, நாளை பெங்களூரு அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2ம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.  இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. 

ALSO READ எனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும்: தோனி பளிச் -வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News