FIDE: நேற்று சந்திரயான்! இன்று பிரக்ஞானந்தா! இந்தியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி தொடருமா?

Praggnanandhaa Tie Breaker: உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று கோளாறினால் அவதிப்பட்ட கார்ல்சென், இன்று எப்படி விளையாடுவார், சந்திரயான் வெற்றியை போல பிரக்ஞானந்தாவின் வெற்றியையும் இந்தியா சுவைக்குமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2023, 06:24 AM IST
  • சந்திரயான் வெற்றியை போல பிரக்ஞானந்தாவின் வெற்றியையும் இந்தியா சுவைக்குமா?
  • டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா
  • செஸ் இறுதிப்போட்டியில் ரூ.91 லட்சம் வெல்லப்போவது யார்?
FIDE: நேற்று சந்திரயான்! இன்று பிரக்ஞானந்தா! இந்தியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி தொடருமா? title=

பாகு, ஆகஸ்ட் 21: நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச் சுற்றில் மோதினார். உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக இன்று டைபிரேக்கர் நடைபெறவிருக்கிறது.

கிளாசிக்கல் செஸ்ஸின் முதல் ஆட்டத்தை 35 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் டிரா செய்தார். இரண்டாவது ஆட்டம் டையில் முடிவடைந்தால், அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் இந்த ஆண்டு செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியாளரைத் தீர்மானிக்க வீரர்கள் ’ரேபிட்’ செஸ் சுற்றில் இன்று பிரக்ஞானனந்தாவும், கார்ல்சனும் சந்திக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு போட்டி நடைபெறும்.

நேற்று, சந்திரயான் சந்திரனை வெற்றிகரமாக முத்தமிட்டு, இந்தியர்களை நெகிழச் செய்தது போல, இளம் புயல் பிரக்ஞானந்தாவின் வெற்றிச் செய்தியும் காதில் தேன் போல வந்து பாயும் என்று எதிர்பார்த்திருந்த செஸ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு நேற்று முடிவுக்கு வரவில்லை.

ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எச்செக்ஸ் (FIDE) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா மற்றும் நார்வேயின் உலகின் நம்பர் ஒன் நட்சத்திரம் மேக்னஸ் கார்ல்சன் இடையேயான கிளாசிக்கல் செஸ் போட்டி புதன்கிழமை டிராவில் முடிந்தது, போட்டியின் வெற்றியாளர் இன்று (ஆகஸ்ட் 24) வியாழன் அன்று தீர்மானிக்கப்படுவார்கள் என்ற செய்தியிஐ சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) Xஇல் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது.

மேலும் படிக்க | FIDE செஸ் சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா? ஆவலுடன் காத்திருக்கும் தமிழர்கள்

"பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெள்ளை காய்களை அமைதியாக நகர்த்திய மேக்னஸ் கார்ல்சன், போட்டியை டிரா செய்து, இறுதிப் போட்டியை டை பிரேக் சுற்றுக்கு நகர்த்திவிட்டார். #FIDEWorldCup இன் வெற்றியாளர் நாளை தீர்மானிக்கப்படும்!," என்று கூட்டமைப்பு ட்வீட் செய்தது.

கிளாசிக்கல் செஸ்ஸின் முதல் ஆட்டத்தை 35 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் இந்தியப் பிரடிஜியுடன் டிரா செய்தார். இரண்டாவது ஆட்டம் டையில் முடிவடைந்ததால், இன்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று கோளாறினால் அவதிப்பட்ட கார்ல்சென், 'பிரக்ஞானந்தா ஏற்கனவே பலமிக்க வீரர்களுக்கு எதிராக பல டைபிரேக்கர்களில் மோதி இருக்கிறார். அவர் மிகவும் வலுவான எதிராளி, நல்ல உடல்தகுதியுடன் இருந்து, சாதகமான நாளாக அமைந்தால் எனக்கு வாய்ப்பு உண்டு. களத்தில் முழுமையாக போராடுவதற்கு உரிய ஆற்றலுடன் நான் இல்லை. இப்போது மேலும் ஒரு நாள் கிடைத்து இருக்கிறது. என்று தெரிவித்தார்.

அதேபோல, பிரக்ஞானந்தா தான் நிதானமாக செயல்பட வேண்டிய கட்டம் இது என்பதை புரிந்து வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டி பற்றி பேசிய பிரக்ஞானந்தா, ”நாளை நான் புத்துணர்வுடன் வர விரும்புகிறேன் என்றும், ஓய்வு எடுப்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நான் நிறைய டைபிரேக்குகளை விளையாடி வருகிறேன். இது நிறைய கேம்களையும் எடுக்கும் என்று எனக்குத் தெரியும், எனவே நான் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கிளாசிக்கல் செஸ் போட்டிகள் இரண்டும் சமநிலையில் இருப்பதால், வியாழன் அன்று பிளேஆஃப் நடைபெறும். டைபிரேக் நடைமுறையானது 25 நிமிட நேரக் கட்டுப்பாடு மற்றும் ஒரு நகர்வுக்கு 10-வினாடி அதிகரிப்புடன் இரண்டு விரைவான விளையாட்டுகளை உள்ளடக்கியது.

இன்று (2023, ஆகஸ்ட் 24) மாலை 4.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில், இருவரும் முதலில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். தலா 25 நிமிடங்கள் வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் இருவரும் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை போட்டி நீண்டுக் கொண்டே செல்லும்.  

சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.66 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

மேலும் படிக்க | என் மகன் இதை செய்ய வேண்டும் என சொன்னதே இல்லை - பிரக்ஞானந்தா தந்தையின் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News