ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் இறுதி போட்டிக்கு PV சிந்து தகுதி பெற்றுள்ளார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளின் 9-ஆம் நாளான இன்று பேட்மிண்ன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளின் அரையிறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் PV சிந்து ஐப்பானின் யாமாகுச்சி-யை எதிர்கொண்டார்.
#AsianGames2018 PV Sindhu reaches the finals after beating Japan's Akane Yamaguchi pic.twitter.com/3XSWWcgVoZ
— ANI (@ANI) August 27, 2018
பரபரப்பாக சென்ற இப்போட்டியில் ஐப்பான் வீராங்கனை யாமாகுச்சி-யை 21-17 15-21 21-10 என்ற செட் கணக்கில் PV சிந்து வெற்றிப்பெற்றார். முன்னதாக மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனாவின் தை சூ யிங் உடன் போட்டியிட்ட இந்தியாவின் சாய்னா தோல்வியை தழுவினார். இதனையடுத்து வெண்கலப் பதக்கத்துடன் அவர் வெளியேறினார்.
இதன் காரணமாக நாளை நடைப்பெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவின் PV சிந்து, சீனாவின் தை சூ யிங் உடன் தங்கத்திற்கான போட்டியில் மோதுகின்றார்!