‘மன்கட்’ முறை தவறு என்றால் விதியை மாற்றுங்கள் -அஸ்வின்!

தான் கிரிக்கெட் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்ததாக தெரிவித்துள்ள அஷ்வின், தான் அவுட் செய்தது தவறு என்றால் கிரிக்கெட் விதியை மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 26, 2019, 04:09 PM IST
‘மன்கட்’ முறை தவறு என்றால் விதியை மாற்றுங்கள் -அஸ்வின்! title=

தான் கிரிக்கெட் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்ததாக தெரிவித்துள்ள அஷ்வின், தான் அவுட் செய்தது தவறு என்றால் கிரிக்கெட் விதியை மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைப்பெற்று வரும் IPL 2019 தொடரின் நான்காவது  போட்டியில் மன்கட் முறைப்படி பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் அவுட் செய்தார். இவரது இந்த செயலுக்கு பலரும் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் செய்தது சரி தான் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான IPL 2019 தொடரின் 4-வது போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது.

ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் என ரன் மழையை பொழிந்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 13-வது ஓவரை அஸ்வின் வீசினார், அப்போது ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் 13-வது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர அஸ்வின் அவரை “மன்கட்” முறையில் ரன் அவுட் செய்தார்.

அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. தற்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் அந்த விதி அடிப்படையிலானதே...

எனினும் இந்த அவுட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது, அஸ்வின் செய்தது தவறு, அவர் கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக அஸ்வின் செய்தியாளர்கள் கேள்விக்கு பதலளித்துள்ளார்... "மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடக்க கூடியவை. நானும் முழுதாக ஓடி வந்து கிரீஸை தொட்டு பந்து வீச வந்தேன், அப்போது பட்லரும் கிரீஸை விட்டு நர்ந்துவிட்டார், அவர் என்னை பார்க்கவுமில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தேன். நான் செய்த இந்த அவுட்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதுபோன்ற அவுட்டுகள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும்" என தெரிவித்தார்.

மேலும் “பட்லரை திட்டமிட்டு இம்முறையில் அவுட்டாக்கவில்லை. விளையாட்டின்போது இயல்பாக அமைந்தது. மேலும், நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட்டாக்கவில்லை. இதில் எங்கிருந்து விளையாட்டின் மதிப்பும் ஸ்பிரிட்டும் பாதித்தது என எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட்டை அதன் விதிபடி விளையாடினால் தவறென்றால், அப்போது மாற்ற வேண்டியது அந்த விதியை தான்” என தெரிவித்துள்ளார்.

சரி மன்கட் என்றால் என்ன?

'மன்கட்' முறைக்கு அப்படிப் பெயர் வரக் காரணமே ஒரு இந்திய பந்துவீச்சாளர்தான். 1947-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டத்தில், வினு மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளர் இதே போன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுனை அவுட் செய்தார்.

அதிலிருந்து இந்த முறைக்கு 'மன்கட்' முறை என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் சட்டத்திட்டத்தின்படி, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்குமுன் கிரீஸைவிட்டு வெளியே சென்றால் பந்துவீச்சாளரால் அவுட் செய்ய முடியும். 

Trending News