CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்! ரெய்னாவை சேர்க்க திட்டம்!

சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜடேஜா இனி ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 17, 2022, 01:58 PM IST
  • ஐபிஎல் 2022க்கு பிறகு சென்னை அணிக்கும் ஜடேஜாவிற்கு போர்.
  • இனி சென்னை அணிக்காக விளையாட போவது இல்லை என்று முடிவு.
  • ஏற்கனவே சென்னை அணியை இன்ஸ்டாவில் அன்பாலோ செய்தார் ஜடேஜா.
CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்! ரெய்னாவை சேர்க்க திட்டம்! title=

இன்னும் ஓரிரு மாதங்களில் ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ரவீந்திர ஜடேஜாவின் தொடர்பு முடிவுக்கு வரும்.  கடந்த மே மாதம் ஐபிஎல் 2022 முடிந்ததில் இருந்து ஜடேஜா சிஎஸ்கே நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார்.  பொதுவாக சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல் செயல்படுவதாக அனைவராலும் கூறப்படும்.  வீரர்கள் ஆண்டு முழுவதும் சிஎஸ்கே உரிமையுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் என்சிஏவில் மறுவாழ்வு பெற்ற ஜடேஜா, மீண்டும் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு, சென்னை அணியுடனான அனைத்து தொடர்பையும் முடித்து கொண்டார் என்று கூறப்படுகிறது.  

கேப்டன் பொறுப்பு ஜடேஜாவின் ஆட்டத்தை பாதிக்கிறது என்று கருதிய சென்னை அணி, அவரது கேப்டன் பதவியை பறித்து மீண்டும் தோனியிடம் கொடுத்தது.  இந்த செயலால் ஜடேஜா மிகவும் சங்கடத்திலும், அவமானத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் அவர் விலா எலும்பு காயத்தால் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.  அதனுடன் சிஎஸ்கே உரிமையுடனான அனைத்து தொடர்பையும் துண்டிக்க முடிவு செய்தார். இதற்கிடையில், ஜடேஜா தனது அனைத்து சிஎஸ்கே தொடர்பான பதிவுகளையும் தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளார், மேலும் கேப்டன் தோனியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் பங்கேற்காத ஒரே வீரர் ஜடேஜா ஆவார்.

மேலும் படிக்க | இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் அணியில் இருந்து நீக்கம்!

தோனி ஏற்கனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்றும், அணியை வழிநடத்துவார் என்றும் கூறியிருப்பதால், ஜடேஜா மீண்டும் வருவதற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை. எவ்வாறாயினும், ஜடேஜா இனி சிஎஸ்கே அணியில் விளையாட மாட்டார் என்றே செய்திகள் வெளிவருகிறது.  மேலும் மற்ற அணி உரிமையாளரிடமிருந்து அவருக்கு வாய்ப்பு வருவதாகவும் கூறப்படுகிறது.  அவரை சமாதானப்படுத்தி அணியில் மீண்டும் கொன்டு வர தோனி மற்றும் மூத்த நிர்வாகிகள் சில முயற்சிகள் எடுக்கலாம்  கூறப்படுகிறது.  

ஜடேஜா 2012-ல் CSK இல் சேர்ந்தார், நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்தித்து பிறகு அணியின் ஒரு முக்கிய புள்ளியாக மாறினார்.  தோனி ஜடேஜாவின் திறனை அடையாளம் கண்டு அவருக்கு நிறைய வாய்ப்புகள் குடுத்தார்.  இப்போது அவர் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கிய அங்கமாக மாறியுள்ளார்.
ஐபிஎல்லில் ஜடேஜா சரியாக விளையாடவில்லை என்றால் இந்திய டி20 அணியில் அவரது இடம் கேள்விக்குறி ஆகும் என்பதால் தோனி அவரை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்தார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சிஎஸ்கே மற்றும் ஜடேஜா இடையேயான போர் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டு தான் வருகிறது.

மேலும் படிக்க | உலகக்கோப்பைக்கு ஜடேஜாவைவிட சஹால்தான் பொருத்தமானவர் - முன்னாள் வீரர் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News