திங்கட்கிழமை தி கபாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கடைசி ஓவரில் முகமது ஷமியின் சிறப்பான பவுலிங்கினால் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் இடம் கேள்விக்குறியானது. டி20 அணியில் பந்த் தொடர்ந்து விளையாடவில்லை என்றாலும், அவர் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 அணியிலும் பந்த் இடம் பிடித்துள்ளார். இருப்பினும், தி கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ரிஷப் பந்த் முழங்கால் ஹீல் பேட் அணிந்திருப்பதைக் காணக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Looks like #RishabhPant hurt his leg in the practice.
Hope it is not serious pic.twitter.com/onXS7JsKoB
— Virat Dangar (@viratdangar) October 17, 2022
மேலும் படிக்க | ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம்
இந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டவுடன் அது வைரலானது மற்றும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் காயம் குறித்து கவலை தெரிவித்தனர். முன்னதாக டி20 உலகக் கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. பிறகு ரவீந்தர் ஜடேஜாவும் காயம் காரணமாக வெளியேறினார், அதே நேரத்தில் தீபக் சாஹரும் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதனால் இந்திய ரசிகர்கள் காயம் காரணமாக மற்றொரு வீரரை இழக்க முடியாது. பயிற்சியில் ஏற்பட்ட காயத்தால் பந்த் இந்த போட்டியில் ஆடவில்லை எனவும், வரும் போட்டிகளில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேஎல் ராகுல் (57), சூர்யகுமார் யாதவ் (50) ஆகியோரின் அரைசதங்களுக்குப் பிறகு, இந்தியா 20 ஓவர்களில் 186/7 என்ற சவாலான ரன்களை எடுக்க உதவியது, ஆஸ்திரேலியாவுக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷல் படேல் 19வது ஓவரில் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கேப்டன் ஆரோன் ஃபின்ச்சின் விக்கெட்டை வீழ்த்தினார், அவர் 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ