பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் ரெடி! ரோகித்தின் 3 மந்திரம்

20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு இந்திய அணி 3 பிளான்களை வைத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 17, 2022, 07:50 AM IST
  • ரோகித் சர்மாவின் 3 பிளான்
  • பாகிஸ்தானை வீழ்த்த திட்டம்
  • உலக கோப்பை இந்தியா தயார்
பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் ரெடி! ரோகித்தின் 3 மந்திரம் title=

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்கிவிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஒருபுறம் கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சந்தித்த மிகப்பெரிய படுதோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதேநேரத்தில், ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானிடம் இந்தியா அடி வாங்கியிருந்தது.

இதற்கெல்லாம் சேர்ந்தது உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பழைய கணக்கை சரி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இந்திய இருக்கிறது. ரசிகர்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர். இதற்காக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 மந்திரங்களை ஆயுதமாக வீச தயாராக இருக்கிறார். வீரர்களிடமும் இது குறித்து தெளிவாக எடுத்துரைத்துவிட்டாராம்.

பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங் இறங்கினாலும், சேஸிங் இறங்கினாலும் ஓபன்னிங் இறங்குபவர்கள் முடிந்தளவுக்கு அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டும் என்பது ரோகித்தின் பிளான். விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சூழலுக்கு ஏற்ப விளையாடினால் பின்வரிசையில் இறங்குபவர்கள் மிச்சத்தை பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறாராம். எக்காரணத்தை கொண்டும் விக்கெட்டை விரைவாக இழக்க கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரோகித் சர்மா அறிவுறுத்தியிருக்கிறாராம். 

மேலும் படிக்க | எள்ளு வய பூக்கலையே... மீசையிலையும் மண்ணு ஒட்டலையே - அவுட்டான விரக்தியில் தடுமாறி விழுந்த வீரர்!

பந்துவீச்சு

இந்திய அணியின் டெத் ஓவர் மிகவும் கவலையளிக்கும் விதமாக இருப்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பயிற்சியார் ராகுல் டிராவிட். எப்படியான சூழலில் எந்தமாதிரியான பந்துவீச வேண்டும் என பயிற்சி கொடுத்து வரும் அவர், வீரர்கள் அத்தகைய சூழலை  எதிர்கொள்ள மனதளவில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறாராம். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சாஹல், அஸ்வின் ஆகியோர் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என ரோகித் சர்மா நம்பியிருக்கிறார். 

பீல்டிங்

பேட்டிங், பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் மொத்த ஆட்டத்தையே மாற்றிவிடும். அதனால் வீரர்கள் முடிந்தளவுக்கு களத்தில் தவறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தங்களால் இயன்ற முயற்சியை செய்யுமாறு கேப்டன் ரோகித் சர்மா வீரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம். அணியில் இருக்கும் அனைவருமே அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், நம்பிக்கையுடன் இருக்கும் ரோகித் சர்மா, கோப்பையை வெல்ல அனைத்து மந்திரங்களையும் செயல்படுத்த தயாராக இருக்கிறார்.

மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : தமிழில் திட்டம் தீட்டி விக்கெட் எடுத்த யுஏஇ வீரர்கள் - யார் அவர்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News