இவை மட்டும் இல்லை என்றால் நான் இல்லை! சென்னையில் ரோஹித் சர்மா பேச்சு!

தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தரவுகள் இல்லையென்றால் நான் இன்று இருக்கும் வெற்றி நிலையை அடைந்திருப்பேனா என்பது தெரியாது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2023, 09:36 AM IST
  • ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஹித்.
  • தொழில்நுட்பம் கிரிக்கெட்டிற்கு அதிகம் உதவுவதாக பேச்சு.
  • நாளை 3வது மற்றும் இறுதி போட்டியில் விளையாடுகின்றனர்.
இவை மட்டும் இல்லை என்றால் நான் இல்லை! சென்னையில் ரோஹித் சர்மா பேச்சு!

ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ்(sports mechanics) என்னும் விளையாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் ஷர்மா, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின், ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராம்கி ஆகியோர் பங்கேற்றனர்.  இந்திய கிரிக்கெட் வாரியத்தினுடனான ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ்(sports mechanics) என்னும் விளையாட்டு தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் 20 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.  இதில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஒரு லீக் மேட்சில் 30 வருடத்திற்கு முன்பு ராம்கி பந்துவீச்சில் நான் அவுட்டான போது நீங்கள் பந்தை எறிந்ததாக நான் குற்றஞ்சாட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் படிக்க | IPL ticket booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?

ராம்கியின் முப்பரிமான பந்துவீச்சு வீடியோ தொழில்நுட்பம் அவர் பந்தை எறியவில்லை என தெளிவாக காண்பிக்கிறது. கடந்த 20 வருடங்களாக இந்த சாதனை பயணத்திற்கு ஸ்போர்ட்ட் மெக்கானிக்ஸ் குழுவினருக்கு வாழ்த்து கூறிக்கொள்கிறேன். விளையாட்டு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப முறைகள் ஆரம்பித்த போது அனைவரையும் நம்பவைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது சிறிய அளவிலான அணிகள் கூட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.  தொழில்நுட்பம் குறித்து வீரர்களிடம் பேசி ராம்கி அவர்களை மாற்றினார். ராம்கியின் பயணத்தின் மூலம் விளையாட்டு குறித்தான தொழில்நுட்பம், வீடியோக்கள், போட்டிகள் குறித்தான தகவல்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. புகைப்படங்கள், புத்தகங்கள் பார்த்துதான் எனது தலைமுறை கிரிக்கெட் பேட்டிங் முறைகளை கற்றுக் கொண்டோம். ஆனால், தற்போதைய தலைமுறையினர் தங்கள் வீடியோக்கள் மூலமும் தொழில்நுட்பங்கள் மூலமாக தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். 

bcci

கிரிக்கெட் தொடர்பான தகவல்கள், வீடியோக்களை சேகரித்து வைத்து அதனை ஆய்வு செய்வதன் மூலம் மிகப்பெறும் பணியை ராம்கி செய்து வருகிறார். விளையாட்டுத்துறை எப்போதும் மாற்றமடைந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். வாழ்க்கையில் உள்ள பலவற்றைப் போல கிரிக்கெட்டும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்.  தற்போதைய விளையாட்டை நோக்கி வரும் குழந்தைகளுக்கு விளையாட்டு தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளன.  நான் எனது முதல் போட்டியில் ஆடும் போது எனது தந்தை அதனை வீடியோ டேப்பில் பதிவு செய்து வைத்திருப்பார். நான் அதனை போட்டி முடிந்து வந்து பார்ப்பேன். ஆனால், தற்போது உடனுக்குடன் அதனை பார்க்க முடிகிறது.  

இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தகவல்கள் வீரர்களுக்கான பயிற்சியில் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை மறுக்க முடியாது. முக்கியமான தகவல்கள் இளம் தலைமுறையினருக்கு இவை பயன்படுகின்றன. விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறன் மற்றும் உரையாடல்களை நிகழ்த்த இது உதவுகின்றது.முதல்தர மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாண்டவர்களும் தங்கள் அறிவை பயன்படுத்தி தொழில்முறையாக பயணிக்கும் ஒரு துறையாக இதனை பார்க்கிறேன்.  தற்போதைய சூழலில் கிரிக்கெட் தொடர்பான நிறைய தகவல்கள், வீடியோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன அதனை எது தேவை எப்போது, எவ்வாறு பயன்படுத்துவது என்ற இடத்தை நோக்கி நாம் நகர்ந்து விட்டோம். பயிற்சியாளர்களுக்கு அது மிகவும் சவாலான பணியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, ஆரம்ப கட்டத்தில் அனைவரையும் தொழில்நுட்பத்தை நம்பவைப்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை செய்ததற்காக ராம்கி அவர்களுக்கு நன்றி. நான் எனது மகனை மருத்துவராக வேண்டும் என்று கூறிணேன் அதற்கு எனது மகன் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படிக்க போவதாக கூறினார் அந்த அளவுக்கு குழந்தைகள் தெளிவாக உள்ளனர் எனத் தெரிவித்தார்.  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், 20 வருடங்களில் பயணித்த ராம்கி அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கும் தனிப்பட்ட முறையில் விளையாட்டு தொடர்பான தகவல்கள், விளையாட்டு வீடியோக்கள் நிறைய உதவி உள்ளன. நான் 2013 ஆம் ஆண்டு மிடில் ஆர்டரில் இருந்து ஓபனிங் ஆர்டராக வேண்டும் என்று நினைத்த போது உலகின் தலை சிறந்த வீரரகளின்  வீடியோக்கள், தரவு தகவல்கள் போன்றவற்றை பார்த்துதான் என்ன தயார்படுத்திக் கொண்டேன். 

அந்த தகவல்கள் இல்லையென்றால் நான் இன்று இருக்கும் வெற்றி நிலைக்கு வந்திருப்பனா என்று தெரியாது. உலகம் தற்போது தகவல்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. கிரிக்கெட்டும் அதனை பயன்படுத்துகிறது. அத்தகைய தகவல்களை நாம் சரியான பயன்படுத்த வேண்டும். அனைத்து மட்டங்களிலும் எனக்கு தெரிந்து நிறைய இளம் வீரர்கள் இந்த தகவல்கள் மூலம் அதிகளவில் பயனடைந்துள்ளனர். தினமும் நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவைதான் ஆட்டத்திறனை மாற்றும். இங்கு யாரும் முழுமையான ஆட்டக்காரர்கள் கிடையாது. அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆட்டத்திறனை மேம்படுத்த தொழில்நுட்பங்கள் உதவி புரியும் எனத் தெரிவித்தார்.  இதனிடையே இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டு ஆகியோருக்கு இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின் விநாயகர் படத்தை  பரிசளித்தார்.

மேலும் படிக்க | IND vs AUS: விரைவில் ஒருநாள் போட்டியில் இருந்து கழட்டிவிடப்படும் முக்கிய வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News