இருக்குற வேதனையில இது வேறயா?!- MIக்கு வந்த அடுத்த சோதனை!

மும்பை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றது.

Last Updated : Mar 28, 2022, 02:15 PM IST
  • மும்பை அணி தனது முதல் போட்டியில் தோல்வி
  • டெல்லி அணியிடம் தோற்றது மும்பை அணி
  • இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை சந்திக்கவுள்ளது
இருக்குற வேதனையில இது வேறயா?!- MIக்கு வந்த அடுத்த சோதனை! title=

நடப்பு  ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியிடம் ரோகித் சர்மாவின் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. ஒரு கட்டத்தில் மும்பையின் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு அதன் பின்னர் டெல்லியின் பக்கம் சென்றது.

இஷான் கிஷனின் மிரட்டலான ஆட்டத்துடன் (81), 177 ரன் குவித்தும் முதல் போட்டியில் தோற்றதால்  மும்பை அணியும் அதன் ரசிகர்களும் கடும் அப்செட்டில் உள்ளனர். இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கணக்காக ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

மேலும் படிக்க | இந்த தடவை ஆரஞ்ச் கேப் விராட் கோலிக்குதானாம்- எப்படி தெரியுமா?

                                                                                   IPl MI Twitter

பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் இந்த முடிவை ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது. அந்த வகையில், ரோகித் சர்மாவுக்கு 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் மும்பை அணியின் முதல் விதிமீறலாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மும்பை அணி ஏப்ரல் 2ஆம் தேதி தனது அடுத்த போட்டியில் களமிறங்குகிறது.  அப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News