கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகும் சுப்மான் கில்?

இளம் பேட்டிங் நட்சத்திரமான சுப்மான் கில் எப்போது KKR அணியின் தலைவர் ஆகுவார் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக் கான் வேடிக்கை பதில் அளித்துள்ளார்!

Last Updated : Jan 23, 2020, 01:16 PM IST
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகும் சுப்மான் கில்? title=

இளம் பேட்டிங் நட்சத்திரமான சுப்மான் கில் எப்போது KKR அணியின் தலைவர் ஆகுவார் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக் கான் வேடிக்கை பதில் அளித்துள்ளார்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக் கான் சமூக ஊடக தளமான ட்விட்டரில் #AskSRK என்ற ஹாஷ்டேகில் கேட்கப்படும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் KKR ரசிகர் ஒருவர், இளம் பேட்டிங் நட்சத்திரமான சுப்மான் கில்லை கொல்கத்தா அணியில் கேப்டனாக மாற்றுவது எப்போது என்று கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ஷாருக் "KKR அணியில் தலைவராக சுப்மான் கில் பதவியேற்கும் முன்பு, அணியின் தலைமை பயிற்சியாளராக உங்களை ஏன் நியமிக்க கூடது?" என எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.  ஷாருக்கின் இந்த பதில் வெளியிடப்பட்டவுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பு, நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் புகைப்படத்துடன் #SavageReplies என்று மறு பதிவிட்டுள்ளது.

சுப்மான் கில் சமீப காலமாக இந்திய A அணியில் பங்கேற்று சிறப்பான வெளிப்பாட்டினை வெளியிட்டு வருகின்றார். இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் (எதிர்வரும் IPL தொடரில்) இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது சுப்மான் கில் தலைமை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தினேஷ் நிச்சயமாக எங்கள் கேப்டன். முடிந்தவரை அனுபவம் வாய்ந்த தலைமைத்துவத்தை நாங்கள் பெற விரும்பினோம், தற்போது எங்கள் விளையாட்டில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான ஈயோன் மோர்கன் எங்கள் அணியுடன் பயணிப்பார்” என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் IPL ஏலத்தின் போது செய்தியாளர்களிடம் முன்னதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News