இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷோயிப் அக்தர்...?

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார். 

Last Updated : May 5, 2020, 07:57 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷோயிப் அக்தர்...?

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார். 

சமூக வலைப்பின்னல் பயன்பாடான 'ஹலோ' குறித்த நேர்காணலில் அக்தர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு பிரிவுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, நேர்மறையாக பதிலளித்த அவர்., "நான் நிச்சயம் செய்வேன். அறிவைப் பரப்புவதே எனது வேலை. நான் கற்றுக்கொண்ட அறிவை, மற்றவர்களுக்கு பரப்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் குறிப்பிடத்தக்க வேக பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவர், "தற்போதைய வீரர்களைக் காட்டிலும் அதிக ஆக்ரோஷமான, வேகமான மற்றும் அதிக பேசக்கூடிய பந்து வீச்சாளர்களை நான் உருவாக்குவேன், நீங்கள் நிறைய ரசிக்கக்கூடிய வகையில் அவர்கள் செயல்படுவார்கள்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களிடையே தனது அறிவைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் விரும்புவதாகவும், மேலும் ஆக்ரோஷமான பந்து வீச்சாளர்களை உருவாக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் IPL அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை பயிற்றுவிக்க விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் 1998 தொடரில் இந்திய பேட்டிங்கில் சிறந்த சச்சின் டெண்டுல்கருடனான தனது ஆரம்பகால தொடர்புகள் குறித்தும் பேசினார். இதுகுறித்து அவர் பேசுகையில்., "நான் அவரைப் பார்த்திருக்கிறேன், ஆனால் அவருக்கு இந்தியாவில் இவ்வளவு பெரிய பெயர் இருந்தது என தெரியவில்லை. அவர் இந்தியாவில் ஒரு கடவுள் என்று அறியப்படுகிறார் என்பதை நான் பின்னர் தான் அறிந்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சச்சின் தன்னுடைய மிகச் சிறந்த நண்பர் எனவும், 1998-ஆம் ஆண்டில், தன்னால் முடிந்தவரை வேகமாக பந்து வீசியபோது, ​​இந்திய பொதுமக்கள் சச்சினுக்கு இணையாக தன்னையும் கொண்டாடினர் எனவும், தனக்கு இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News