இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது!
மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை எளிதாக வென்ற நிலையில், 3 t20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியினை இன்று விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றியினை பெற்றது. எனவே இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், மேற்கிந்திய வெற்றி பெரும் பட்சத்தில் தொடரினை சமன் செய்யும்.
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றிப்பெற்ற ரசிகர்களுக்கு தீபவளி பரிசு அளிக்குமா என ஆர்வத்தில் காத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில், இன்று இரவு 7 மணிக்கு நடைப்பெற்றும் இப்போட்டி, இந்த மைதானத்தில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச போட்டி ஆகும்.
இந்த மைதானத்தில் முதலில் ஆடும் அணி 130 ரன்கள் குவித்தாலே, அதை சேஸ் செய்வதி மிகவும் கடினம் என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மைதான பராமரிப்பாளர்களின் கருத்துப்படி இன்றைய போட்டி மட்டையாளர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும், அதே வேலையில் மைதானத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமும் இருக்கும் என தெரிகிறது.
அணிகள் விவரம்...
- இந்தியா: ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், பூம்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர்,, ஸ்ரேயஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், சுபாஷ் நதீம்.
- மேற்கிந்தியா: ஷாய் ஹோப், தினேஷ் ராம்தீன், சிம்ரான் ஹெட்மையர், கிரன் பொள்ளார்ட், ப்ராவோ, ரோவ்மென் பவுள், சார்லஸ் ப்ரத்வொயிட், பெபின் ஹெல்லன், கெர்ரி பெர்ரி, ஹோஷென் தாமஷ், பூரன், மெக்கெய், ரூத்தர் போர்ட்.