இந்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிசிசிஐ!

ஐபிஎல் 2022 டி20 லீக்கில் இருந்து தாமதமாக வெளியேறிய வீரர்கள் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2022, 02:11 PM IST
  • ஐபிஎல் போட்டியில் உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது.
  • சில வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் பங்கேற்கவில்லை.
  • அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ ஆலோசனை.
இந்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிசிசிஐ! title=

ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  கடைசி நேரத்தில் டி20 லீக்கில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் வெளியேறுவதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கவுன்சில் தீவிரமாக கவனித்துள்ளன. பயோ-பபிள் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளால் தேர்வு செய்யப்பட்ட, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐபிஎல் 2022ல் இருந்து விலகினார்கள்.

மேலும் படிக்க | IPL2022: நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்!

கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஜிசி கூட்டத்தில், போதிய காரணமின்றி ஐபிஎல்லில் இருந்து விலகும் வெளிநாட்டு நட்சத்திரங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்-ல் இருந்து விலகிய ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற கிரிக்கெட் வீரர்கள் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.  ஐபிஎல் ஏலத்தில் சிறிய தொகையை சம்பளமாக பெரும் வீரர்கள் வெளியேறும் போக்கு அதிகரித்து வருவது குறித்து சில உரிமையாளர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.  

“லீக்கின் முக்கியமான பங்குதாரர்களாக இருக்கும் உரிமையாளர்களுக்கு GC அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அவர்கள் பல திட்டமிடலுக்குப் பிறகு ஒரு வீரரை ஏலம் எடுத்தனர். ஒரு வீரர் வெளியேறினால், அதுவும் சாதாரண காரணங்களுக்காக அந்த அணிகளின் கணக்கீடுகள் மோசமாகிவிடும்,” என்று GC உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் பேசி இருந்தார்.  இனி இது போல் ஐபிஎல்-ல் இருந்து வெளியேறிய வீரர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை விளையாட அனுமதிக்கபட மாட்டார்கள்.  மேலும், இது ஒரே போல் இல்லாமல் ஒவ்வொரு வீரரின் காரணங்களை பொறுத்து இருக்கும் மற்றும் காரணம் உண்மையானதாக இருந்தால் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

jason

ராய் மற்றும் ஹேல்ஸைத் தவிர, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 7.25 கோடியில் மார்க் வுட்டை காயத்தால் இந்த சீசனில் ஆடவில்லை. ராயைப் பொறுத்தவரை, அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், தனது விளையாட்டில் பணியாற்ற விரும்புவதாகவும் கூறியிருந்தார்.  “எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது சரியானது என்று நான் உணர்கிறேன். அதே போல் அடுத்த இரண்டு மாதங்களில் என்னையும் எனது ஆட்டத்திற்காகவும் நேரத்தை செலவிடுகிறேன்,” என்று ராய் கூறினார். 

 

மேலும் படிக்க | IPL2022: கடைசி நிமிட பரபரப்பு! தம்பியின் விக்கெட்டை வீழ்த்திய அண்ணன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News