ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் குரூப் 12 சுற்று போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் போட்டிகளாக இருப்பதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றன. குரூப் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அணிகளுக்கும் தற்போதைய சூழலில் அரையிறுதிக்கான வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்து அணி கம்பீரமாக முதல் இடத்தில் இருந்தாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், அடுத்து வர இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
மேலும் படிக்க | T20 world cup: உலக கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரருக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் அணி
எந்த அணி தோல்வியடைந்தாலும் ஏறக்குறைய அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது முடிவுக்கு வரும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உலக கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து கீழ் உள்ளது. அதாவது 4வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி அடுத்த இரு போட்டிகளிலும் முறையே அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதேபோல் இங்கிலாந்து அணி, அடுத்ததாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த அணியும் இரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரு போட்டியில் வெற்றி பெற்றால் அயர்லாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிடுவிடும். மாறாக எந்த அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும். இப்படியான இடியாப்ப சிக்கலில் 20 ஓவர் உலக கோப்பையின் குரூப் 1 இருக்கிறது. குரூப் 2 பிரிவில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தாலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நிம்மதியாக இருக்கலாம்.
மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ