ஜெயித்தது இந்தியா... ஆனால் பாகிஸ்தான் முதலிடம்!!

Last Updated : Nov 8, 2017, 07:21 PM IST
ஜெயித்தது இந்தியா... ஆனால் பாகிஸ்தான் முதலிடம்!! title=

டி-20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 119 புள்ளிகள் பெற்று 5_வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

டி-20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 125 புள்ளி பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்ததால், 120 புள்ளி பெற்று இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்து உள்ளது. இந்தியா 119 புள்ளிகள் பெற்று 5_வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News