நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. என முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்!
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான #ChiyaanVikram58 திரைப்படத்தில் இர்பான் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தமிழ் மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிடுகையில்., "வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" #ChiyaanVikram58" என பதிவிட்டுள்ளார்.
வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. தல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waitin hiyaanVikram58 pic.twitter.com/gNczgT27oq
— Irfan Pathan (@IrfanPathan) November 5, 2019
7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக கடாரம் கொண்டாம் திரைப்படம் உருவானது. அதேப்போல் இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2012-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இர்பான் பதான் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியாவுக்காக 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 173 விக்கெட்டுகளையும், ஐந்து அரைசதங்களுடன் 1,544 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., 24 டி20 போட்டிகளிலும் விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.