காதலர் தினத்தன்று தனது முதல் காதல் யார் என்று கூறிய சச்சின் டெண்டுல்கர்

தனது முதல் காதல் எதுவென்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உலகின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Feb 14, 2020, 02:58 PM IST
காதலர் தினத்தன்று தனது முதல் காதல் யார் என்று கூறிய சச்சின் டெண்டுல்கர்
Photo: IANS

புது டெல்லி: காதலர் தினம் அன்பின் நாள் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நேசிக்கும் அனைவரும் அதை ஒரு சிறப்பு நபருடன் செலவிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை (Sachin Tendulkar) எவ்வாறு நாம் நினைக்காமல் இருக்க முடியும்.

சச்சினும் தனது காதலுக்கான இடத்தை அடைந்தார். அதன் ஒரு காட்சியை தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். சச்சின் தனது ட்விட்டரில் 11 வினாடி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் "இது தான் எனது முதல் காதல்" என்று கூறியுள்ளார்.

 

உண்மையில், மாஸ்டர் பிளாஸ்டரின் முதல் காதல் இன்னும் "கிரிக்கெட்" (Cricket) தான். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் தனது மட்டையை எடுப்பதை கைவிடுவதில்லை. இன்றும் அவர் இதே போன்ற ஒன்றை செய்தார். சச்சின் ஒரு ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடினார். இந்த வீடியோவை மாஸ்டர் பிளாஸ்டர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு "என் முதல் காதல்" என்ற தலைப்பை அவர் கொடுத்துள்ளார். இந்த தலைப்பில் அவர் சிரிக்கும் ஈமோஜியையும் போட்டுள்ளார்.

உண்மையில், சர்வதேச கிரிக்கெட்தில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. அவர் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.