இந்திய அணியில் பும்ராவின் இடத்தை நிரப்பப்போகும் 150 கி.மீ வேகப்புயல்

மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய அதிவேகப்புயல் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2022, 02:29 PM IST
  • இந்திய அணி வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்
  • மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர்
  • பும்ராவுக்கு போட்டியாக வருவார் என கணிப்பு
இந்திய அணியில் பும்ராவின் இடத்தை நிரப்பப்போகும் 150 கி.மீ வேகப்புயல் title=

ஐபிஎல் போட்டி மார்ச் 26 ஆம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக அவதாரமெடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய அணியின் எதிர்கால வேகப்பந்துவீச்சாளராக வரக்கூடிய இளம் வீரரை அடையாளப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக வரக்கூடிய திறமை உம்ரான் மாலிக்கிடம் இருப்பதாக கூறியுள்ளார். மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய அவர், தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டியிருப்பதாக குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க | IPL ஹிஸ்ட்ரியிலேயே நேத்து மேட்ச்தான் வொர்ஸ்ட்டாம்! - காரணம் இதுதான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ள ரவிசாஸ்திரி, பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அறிந்து சரியான இடத்தில் அடிக்கும்பட்சத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய பந்துவீச்சு அணுகுமுறைகளை அவர் மேம்படுத்திக் கொண்டால், உம்ரான் மாலிக்கை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். 

15வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை, சன்ரைசர்ஸூக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய சாஹல் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே வீரர்களை தக்கவைப்பதற்கான பட்டியலில் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய உம்ரான் மாலிக் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

மேலும் படிக்க | இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக இந்த விக்கெட் கீப்பர் என்ட்ரி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News