IPL ஹிஸ்ட்ரியிலேயே நேத்து மேட்ச்தான் வொர்ஸ்ட்டாம்! - காரணம் இதுதான்!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மோசமான தோல்வியைத் தழுவியது.

Last Updated : Mar 30, 2022, 11:56 AM IST
  • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் தோல்வி
  • தோல்வியுடன் தனது பயணத்தைத் தொடங்கியது ஐதராபாத்
  • பவர்ப்ளேயில் ஐதராபாத் மோசமான சாதனை
IPL ஹிஸ்ட்ரியிலேயே நேத்து மேட்ச்தான் வொர்ஸ்ட்டாம்! - காரணம் இதுதான்! title=

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆட்டத்தைத் தொடராமல் இருந்துவந்த ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதன்முறையாக நேற்று களமிறங்கின. புனேவில் நடந்த இப்போட்டியில் ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 211 ரன் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணியால் 149 ரன்களை மட்டும்தான் எடுக்க முடிந்தது.  பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சொதப்பியது அந்த அணியைத் தோல்விப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்நிலையில், இப்போட்டியில் மோசமான சாதனை ஒன்றையும் ஐதராபாத் அணி தனக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆம், பவர் ப்ளேவில் மிகவும் குறைவான ரன்கள் சேர்த்த அணி எனும் மோசமான சாதனையை ஐதராபாத் நிகழ்த்தியுள்ளது. நடப்பு ஐபிஎல்லில்தானே எனக் கேட்டால் அதுதான் இல்லை; ஒட்டுமொத்த ஐபிஎல் ஹிஸ்டரியிலேயே நேற்றைய பவர்ப்ளேதான் மோசமான பவர்ப்ளேயாக அமைந்துள்ளது.

களமிறங்கியது முதலே மோசமாக விளையாடிய ஐதராபாத் அணி, முதல் விக்கெட்டாக கேன் வில்லியம்சனை இழந்தது. அடுத்துவந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரன் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறிய அந்த அணியால், பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஐ.பி.எல். சீசனில் பவர் பிளேயில் அடிக்கப்பட்ட  மிகவும் குறைந்த ஸ்கோராக இது பதிவானது. 

மேலும் படிக்க | சாஹலின் சூழலில் வீழ்ந்த ஹைதராபாத்!

முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் பவர்பிளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது.  இந்நிலையில் இத்தனை நாளாக தம்மீது இருந்துவந்த அந்தக் களங்கத்தை இப்போட்டியில் துடைத்துள்ளது ராஜஸ்தான் அணி. இப்பட்டியலின் அடுத்த மூன்று இடங்களையும் (15/2, 16/1, 16/1)  சென்னை அணியே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இருக்குற வேதனையில இது வேறயா?!- MIக்கு வந்த அடுத்த சோதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News