ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நான்காவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 விக்கெட்டை எட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது. மேலும ஆசி 38.2 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்ததிருந்த போது உமேஷ் தனது 100 விக்கெட்டினை எட்டினார்.
100 ODI wickets for Umesh Yadav! India battling back strongly v Australia in Bangalore.
LIVE: https://t.co/xRQiY5Fi4k #INDvAUS pic.twitter.com/a0PxIn4ijL
— ICC (@ICC) September 28, 2017
உமேஷ் இந்திய அணியில் நிரந்திர வீரராக இல்லை, அவ்வப்போதே அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனது ஏழு ஆண்டு கிரிக்கெட் பயனத்தில் 71 போட்டிகளில் விளையாடி தற்போது 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி தனது பந்துவீச்சாளர்களுக்கு சுழற்சி முறையினில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இன்றைய பெங்களூர் சர்வதேச போட்டியில் உமேஷ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.