வைரல் வீடியோ: மழை நனைந்தப்படியே முடிவை அறிவித்து வெளியேறிய நடுவர்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் அலிம் டாரின் வீடியோ.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2018, 06:33 PM IST
வைரல் வீடியோ: மழை நனைந்தப்படியே முடிவை அறிவித்து வெளியேறிய நடுவர் title=

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 23 ஆம் தேடி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான நடைபெற்ற ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவ்வப்போது மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடை செய்யும் நிலை ஏற்ப்பட்டு வந்தது. இதனால் பல முறை வீரர்கள் மழை காரணமாக பெவிலியன் நோக்கி ஓட வேண்டியிருந்தது. மற்ற போட்டிகளைப் போலவே, 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் மழை பெய்தது. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் அலிம் டார், அவுட் குறித்து அறிவிப்புக்காக மழையில் நனைந்தபடியே மூன்றாவது நடுவருக்காக காத்திருந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பாராட்டு மழையும் அவருக்கு கிடைத்து வருகிறது. 

இங்கிலாந்து அணி வெற்றி பெற 367 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய இங்கிலாந்து 26 ஓவர்களில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 27வது ஓவரை வீசிய இலங்கை அணியின் அகிலா தனஞ்சய, இங்கிலாந்து லியாம் பிளன்கெட்டை எல்பிடபிள்யூ செய்தார். நடுவர் அலீம் டார்னே அவுட் கொடுத்து விட்டார். ஆனால் லியாம் பிளன்கெட் டி.ஆர்.எஸ் (DRS) கேட்டார். 

அதேசமயத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் இரண்டு அணியின் வீரர்கள் பெவிலியன் நோக்கி ஓடினார்கள். ஆனால் நடுவர் அலீம் டார் மைதானத்திலேயே இருந்தார். டி.ஆர்.எஸ் குறித்து மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தார். 

மைதானத்தில் மழை வேகமாக பெய்யத்தொடங்கியது. ஆனாலும் மழையில் நனைந்தப்படியே மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தார். இறுதியாக மூன்றாவது நடுவர் லியாம் பிளன்கெட் அவுட் என அறிவித்தார். பின்னர் அவர்(அலீம் டார்) பெவிலியன் திரும்பினார்.

 

 

Trending News