ரிக்கி பாண்டிங்கை விஞ்சி பெரிய சாதனை படைப்பாரா விராட் கோலி?

மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது, ​​ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை விஞ்சி விராட் கோலி ஒரு பெரிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated: Jan 13, 2020, 08:59 PM IST
ரிக்கி பாண்டிங்கை விஞ்சி பெரிய சாதனை படைப்பாரா விராட் கோலி?

மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது, ​​ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை விஞ்சி விராட் கோலி ஒரு பெரிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கேப்டன் விராட் கோலி வான்கடே போட்டியில் ஒரு சதத்தைப் பெறும் பட்சத்தில், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் (அனைத்து வடிவங்களிலும்) அதிக சதங்களை அடித்த கேப்டனாக, போற்றப்படுவார். தற்போது, ​​கோலி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், என்றபோதிலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் இந்த இடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இந்த பட்டியலில் பாண்டிங் மற்றும் கோலி இணைந்திருந்தாலும், இந்திய கேப்டன் இச்சாதனையினை பாண்டிங்கை விட மிகக் குறைந்த நேரத்தில் படைத்துள்ளார். அதாவது 376 இன்னிங்ஸில் பாண்டிங்க் படைத்த சாதனையினை கோலி வெறும் 196 இன்னிங்ஸில் படைத்துள்ளார். எனவே இப்பட்டியலில் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார் என கூறலாம், எனினும் வரும் போட்டியில் கோலி ஒரு சதத்தினை அடித்தால் இந்த பட்டியலில் பிரதான இடத்தினை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நடந்த பிங்க்-பந்து டெஸ்டில் கோலியின் கடைசி சதம் பங்களாதேஷுக்கு எதிராக அமைந்தது. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் அவர் மற்றொரு சதம் பெறும் முனைப்பில் இருந்தார், ஆனால் அவர் 85 ரன்களுக்கு வெளியேற சதத்திற்கான வாய்ப்பு தவறி போனது. ஒட்டுமொத்தமாக, கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்துள்ளார். இதில் 27 டெஸ்ட் சதங்கள் மற்றும் 43 ஒருநாள் சதங்கள் அடக்கம்.

வீரர் போட்டி இன்னிங்ஸ்  ரன்கள் 100-கள்
விராட் கோலி 169 196 11025 41
ரிக்கி பாண்டிங் 324 376 15440 41
கெளன் ஸ்மித் 286 368 14878 33
SPD ஸ்மித் 93 118 5885 20
MJ கிளர்க் 139 171 7060 19
பிரைன் லாரா 172 204 8410 19

இதற்கிடையில், இந்திய கேப்டன், திங்களன்று, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூவரையும் அணியில் சேர்க்கும் பொருட்டு அவர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அணிக்கு உதவினால் தனது பேட்டிங் நிலையை மாற்றத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

"நாங்கள் களத்தில் என்ன சமநிலையை எடுக்க விரும்புகிறோம் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என்றும் கோலி போட்டியின் முந்திய நாளில் கூறினார். இதனிடையே ஆர்டரை மாற்றம் செய்வதில் அவர் மகிழ்ச்சியாக இருப்பாரா என்று கேட்டதற்கு, விராட், ”ஆம், பெரிய வாய்ப்பு. அவ்வாறு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நான் எங்கு பேட் செய்கிறேன் என்பது குறித்து எனக்கு முக்கியம் இல்லை, அணியின் தேவையே இங்கு முக்கிய காரணி" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.