விராட் கோலி - அனுஷ்கா சர்மா சொன்ன குட்நியூஸ்... சச்சின் கொடுத்த சர்பிரைஸ்..!

Virat Kohli and Anushka Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 22, 2024, 10:51 AM IST
  • மகனுக்கு தந்தையானார் விராட் கோலி
  • அகாய் என பெயரிட்டுள்ளதாக அறிவிப்பு
  • விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்
விராட் கோலி - அனுஷ்கா சர்மா சொன்ன குட்நியூஸ்... சச்சின் கொடுத்த சர்பிரைஸ்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதி இரண்டாவது முறையாக பெற்றோர் ஆகியுள்ளனர். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலியே தன்னுடைய எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தியில், தங்களுக்கு மகன் பிறந்துள்ளார் என்றும், குழந்தை வாமிகாவுக்கு அழகான தம்பி கிடைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில் எங்களுடைய பிரைவசிக்கும் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், மகனுக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | IPL 2024: சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் மீண்டும் காயம்!

இதனை பார்த்த கிரிக்கெட் உலகம் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், "விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு விடுத்திருக்கும் வாழ்த்து செய்தியில், உங்கள் அழகான குடும்பத்திற்கு விலைமதிப்பற்ற சேர்க்கையான அகாயின் வருகைக்கு விராட் மற்றும் அனுஷ்காவுக்கு வாழ்த்துகள்!. இப்போது, உங்களின் வீட்டு அறையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ததுபோல் உங்கள் உலகத்தை முடிவில்லா மகிழ்ச்சி மற்றும் சிரிப்பால் நிரப்பட்டும்" என கூறியுள்ளார். விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ஏற்கனவே நான்கு வயதில் வாமிகா என்ற மகள் இருக்கிறார். 

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய அணியுடன் வந்த விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விடுப்பு வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று விடுப்பு வழங்கிய பிசிசிஐ, விராட் கோலியின் முடிவை தாங்கள் ஏற்பதாகவும் தெரிவித்தது. ஆனால் எதற்காக விடுப்பு எடுத்தார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. விராட் கோலி மவுனமே காத்து வந்தார். இது குறித்து பல்வேறு தகவல்கள் உலாவிக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து போலி செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் விராட். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்பதால் இனி நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாட உள்ளார். ஆர்சிபி அணியில் இருக்கும் விராட் கோலி, விரைவில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். 

மேலும் படிக்க | தல தோனி சென்னைக்கு திரும்புவது உறுதி! ஐபிஎல் 2024 தொடக்க போட்டியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News