20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. அதுவும் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியை ரசிகர்களாலும், கிரிக்கெட் முன்னாள் வீரர்களாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாததே இந்த தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் வீரர்கள் அவர்களை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வீரேந்திர சேவாக்
இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், சரியாக விளையாடாத சீனியர் பிளேயர்களுக்கு இந்திய 20 ஓவர் அணியில் எதுக்கு இடம்? என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் ஃபார்மில் இருக்கும் பிளேயர்களுக்கு மட்டுமே இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
ராபின் உத்தப்பா
சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதி உள்ளிட்ட இளம் வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். சீனியர் பிளேயர்களுக்கு பதிலாக இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ அதிரடி
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், மிகப்பெரிய மாற்றங்களை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக அனைத்து சீனியர் பிளேயர்களையும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிட முடிவெடுத்துள்ளது. அவர்களுக்கு பதிலாக முற்றிலும் இளம் பிளேயர்களை கொண்ட அணியை மீண்டும் கட்டமைக்க முடிவு செய்திருக்கிறது
ரோகித் சர்மாவுக்கு சிக்கல்
கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு வீரராக அவரால் அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கடந்த சில வருடங்களில் அவர் ஆடிய போட்டிகளில் புள்ளி விவரங்களை எடுத்து பார்க்கும்போது மிக மிக மோசமாக இருக்கிறது. அவரைவிட சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதி உள்ளிட்ட பிளேயர்கள் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கவும் வாய்ப்பு இருப்பதாக இப்போதே தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ