மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தற்போது அபுதாபியில் (Abu Dhabi) உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமை மேற்கொண்டு வருகிறது. நடப்பு சாம்பியன்களான MI செப்டம்பர் 19 ஆம் தேதி, இந்த சீசனின் துவக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்கின்றனர். இரு அணி வீரர்களும் முதல் ஆட்டத்திற்காக கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, நெட் பிராக்டிசில் மிக நன்றாக விளையாடி பயிற்சி எடுத்தார். COVID-19 காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஆடினாலும் அவர் ஆட்டத்துடன் நல்ல இசைவைக் கொண்டுள்ளது தெரிய வந்தது. நான்கு முறை இந்தப் போட்டிகளில் வென்றுள்ள அணியான மும்பை இந்தியன்ஸ், ரோஹித் ஷர்மா (Rohit Sharma) அடித்த ஒரு 95 மீட்டர் சிக்சரின் வீடியோவை புதன்கிழமை தங்கள் சமூக ஊடக அகௌண்டில் பகிர்ந்துள்ளனர்.
ரோஹித்தின் பெரிய சிக்ஸ் அரங்கத்தை லாவகமாகக் கடந்து சென்று அபுதாபியின் சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது விழுந்தது.
"பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை அடிபார்கள், லெஜெண்டுகள் ஸ்டேடியத்தைக் கடப்பார்கள், ஹிட்மேனான ரோஹித் ஷர்மா சிக்சர் அடித்து, ஸ்டேடியத்தைத் தாண்டி ஓடும் பேருந்தையும் தாக்குவார்” என அந்த வீடியோவில் கேப்ஷன் எழுதப்பட்டிருந்தது.
Batsmen smash sixes
Legends clear the stadium
Hitman smashes a six + clears the stadium + hits a moving #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/L3Ow1TaDnE— Mumbai Indians (@mipaltan) September 9, 2020
ALSO READ: ரிஷப் பந்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிடுவதாகும்: பிரசாத்
ரோஹித் கடந்த சீசனில் இருந்த அதே உறுதியுடன் வரவிருக்கும் சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரன்களைக் குவிக்கும் முனைப்புடன் உள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காயம் ஏற்படுவதற்கு முன்னர் ரோஹித் இந்தியாவுக்காக சிறந்த ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு ரோஹித் IPL 2020 இல் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வருகிறார். இதில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ரோஹித்துடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயின்டன் டி கோக், கிரோன் பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் வரிசையில் பலம் சேர்க்கிறார்கள்.
பந்துவீச்சு தாக்குதலில், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லெனகன் மற்றும் ராகுல் சாஹர் போன்றவர்கள் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.
ALSO READ: IPL 2020: ஹர்பஜன் சிங்-க்கு பதிலாக இந்த 4 வீரர்களின் பெயர்கள் CSK அணிக்கு பரிந்துரை