RR அணியின் ப்ளே-ஆப் கனவை முடிவுக்கு கொண்டுவருமா SRH?

IPL 2019 தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

Last Updated : Apr 27, 2019, 01:14 PM IST
RR அணியின் ப்ளே-ஆப் கனவை முடிவுக்கு கொண்டுவருமா SRH? title=

IPL 2019 தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

IPL 2019 தொடரின் 45-வது லீக் ஆட்டம் இன்று ஜெய்ப்பூர் சவய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னதாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற பொதிலும் ராயல்ஸின் வெற்றி பயணம் வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும்.

கொல்கத்தா நைட் ரொடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கும் இதே நிலைமை தான்...

இன்றைய போட்டியில் களம்காணும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கின்றது.

இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் இரு அணிகளும் கிட்டத்தட்ட 200 ரன்களை குவித்து ரன் மழை பொழிந்தனர். எனினும் ஐதராபாத் அணி இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முக்கிய பங்கு வகித்த ஜானி பாரிஸ்டோ இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. எனினும் டேவிட் வார்ணர் மற்றும் கேன் வில்லிம்சன் தங்களது பங்கினை சிறப்பாக வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News